தமிழகத்தில் ஒரே நாளில் 66.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் 66.50 லட்சம் குழந்தைகளுக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு இரண்டு நாட்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் கே.குழந்தைசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடை பெற்றது. இதற்காக தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள், அங்கன்வாடி மையங் கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டு இருந்தது.

வெளி யூர்களுக்கு பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1,652 நகரும் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க1,000 நடமாடும் குழுக் களும் செயல்பட்டது. இவை தவிர 3 ஆயிரம் அரசு வாகனங்கள் பயன் படுத்தப்பட்டன.

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 2 லட்சம் பேர் ஈடுபட்டனர். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெற்றது.

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று காலை 7 மணி அளவில் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கி முகாமை தொடங்கி வைத் தனர். பொதுமக்கள் 5 வயதுக் குட்பட்ட குழந்தைகளை முகாம் நடைபெறும் இடத்துக்கு தூக்கி வந்து ஆர்வமாக போலியோ சொட்டு மருந்து போட்டுச் சென்றனர்.

இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் கே.குழந்தைசாமி கூறியதாவது:

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்டு சுமார் 70 லட்சம் குழந்தைகள் இருக்கின்றனர். மாலை 6 மணி நிலவரப்படி சுமார் 66.50 லட்சம் (95 சதவீதம்) குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தையின் விரலில் மை வைக்கப்பட்டுள்ளது.

விடுபட்ட குழந்தைகளுக்கு வீடுவீடாக சென்று சுகாதாரப் பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்குவார்கள். இதற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும். இவை தவிர இன்னும் 2 நாட்களுக்கு ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங் கள், மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் செயல் படும். விடுபட்டுள்ள குழந்தைகளை பெற்றோர் அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்து போட்டுச் செல்லலாம். இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் பிப்ரவரி மாதம் 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இவ்வாறு டாக்டர் கே.குழந்தைசாமி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்