முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழக விவசாயிகள், பொதுமக்கள் ஒன்று திரண்டு போராடியதுபோல, மீத்தேன் திட்டத்தை எதிர்த்தும் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்றார் நடிகர் எஸ்.வி.சேகர்.
நாகப்பட்டினம் மாவட்டம் சீர் காழிக்கு, சேவை அமைப்பு ஒன்றின் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்க நேற்று முன்தினம் வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
தமிழகத்தில் டாஸ்மாக் கடை களால் லட்சத்துக்கும் மேற்பட்ட குடும் பங்கள் அழிந்து விட்டன.
தற்போது 12, 13 வயது மாணவர்கள் மற்றும் பெண் களும் கூட மது அருந்த ஆரம்பித்து விட்டனர். டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட, மணல், கிரானைட் குவாரிகளை அரசுடமை யாக்கினால் பல கோடி ரூபாய் வருமானம் கூடுதலாக கிடைக்கும். சகாயம் போன்ற நேர் மையான அதிகாரிகள் இருப்பதால்தான் நாட்டில் மழை பெய்கிறது.
அதிமுகவை தலைமையேற்று நடத்துபவர் ஜெயலலிதா என்பதால், மாநில நிர்வாகம் சரியாக இல்லை என்றால் அது கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும்.
கோட்சேவுக்கு சிலை வைப்பது தவறான உதாரணம். நாட்டில் தீவிர வாதம் முற்றிலுமாக வேரறுக்கப்பட வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago