முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த கேரள அரசு பல்வேறு இடையூறுகளை செய்து வந்தது. தமிழக அரசு நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின்னர், 35 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு நவம்பர் 20-ம் தேதி அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது. ஆனால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது. என கேரள முதல்வர் உம்மன்சாண்டியும், அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டு வந்தனர்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு இருவரும் சேர்ந்து டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து பேசினர். கேரள முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டாக பிரதமரை சந்தித்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அச்சுதானந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் மீதும் நீதிமன்றங்களில் ஊழல் வழக்கு நடக்கிறது. இதனால், அடுத்து தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது என பிரதமர் மோடி, தமிழகத்துக்குச் சாதகமாகக் கூறிவிட்டார்.
அணையைச் சுற்றியுள்ள மக்களின் நலன்களையும், அவர்களது சொத்துகளையும் பற்றி அவர் கருத்தில் கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்றுதான், அவர் பெரியாறு அணை பிரச்சினையில் தலையிட மறுத்துவிட்டார். கேரளத்தின் மற்ற கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பெரியாறு, வைகை பாசன ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ், முல்லை பெரியாறு அணை மீட்புக்குழு தலைவர் ரஞ்சித், பதினெட்டாம் கால்வாய்த் திட்ட விவசாய சங்கச் செயலாளர் திருப்பதி வாசகன் ஆகியோர் கூறும்போது, அரசியல் ஆதாயத்துக்காக கேரளத்தில் கட்சியினர் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், பெரியாறு அணை பிரச்சினையில் அரசியல் சாயம் பூசுகின்றனர்.
புதிய அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியதை திரும்பப் பெற வலியுறுத்தியும், 152 அடியில் நீரைத் தேக்க கேரள அரசு இடையூறு செய்வதை தடுத்து நிறுத்தக் கோரியும் ஐந்து மாவட்ட மக்களுக்கு நாளை முதல் தினந்தோறும் 5 ஆயிரம் என்ற கணக்கில் 3 லட்சம் அஞ்சல் அட்டைகளை இலவசமாக கொடுக்க உள்ளோம். இந்த அட்டையில் அவரவர் முகவரியை எழுதி பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago