தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த நீதிமன்றத்தில் வழக்கு: தமிழருவி மணியன்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.

சேலத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு தாய்மை உள்ளம் கொண்ட அரசு என்று சொல்லிவருகிறது. ஆனால், இதை மக்கள் விரோத அரசு என்றுதான் சொல்ல வேண்டும். டாஸ்மாக் விவகாரத்தில் வெளிப்படையான தன்மை இல்லை. 2013 -2014 நிதியாண்டில் மதுவின் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் 23 ஆயிரம் கோடி. 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மக்கள் குடித்திருந்ததால்தான் அரசுக்கு இந்த வருவாய் கிடைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் மது விலக்கை கொண்டுவர, காந்திய மக்கள் இயக்கம் விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்.போராட்டங்கள் மூலம் தமிழகத்தில் மதுவை ஒழிக்க முடியாது. எனவே தான், நீதிமன்றத்தின் மூலம் மதுவின் கொடுமையில் இருந்து மக்களை மீட்க முடிவு செய்துள்ளோம்.

மோடி அரசு தற்போது ஆர்எஸ்எஸ்-ன் நடைமுறை திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வருகிறது. பாஜக மக்கள் விரோத திட்டங்களை கைவிட வேண்டும். தமிழகத்தில் பாஜக-வுக்கு செல்வாக்கு அதிகரித்து விட்டதாகவும், 2016-ல் ஆட்சி அமைப்போம் என்றும் பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். அது நடக்காது.

திமுக தலைவர் கருணாநிதி 11-வது முறையாக தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு காந்திய மக்கள் இயக்கம் பாராட்டு தெரிவிக்கிறது. அவர், வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் மதுவிலக்கு மற்றும் ஊழலற்ற அரசை தமிழகத்தில் ஏற்படுத்தக்கூடிய ஒரு நல்ல கூட்டணியை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்