சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், அரசுப் பள்ளிகளை அடுத்தடுத்து மூடப்படுவதின் மூலம் தனியார் பள்ளிகளுக்கு மறைமுகமாக அரசு உதவுவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
சென்னையில் ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள மழலையர் பள்ளி , தொடக்கப்பள்ளி என 54 பள்ளிகளை சென்னை மாநகராட்சி மூடிவிட்டதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரிப்பன் மாளிகை முன்பு முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தியது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மூடப்பட்ட பள்ளிகளை திறக்கச் சொல்லி முழக்கமிட்டனர்.
கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இதில் கலந்துகொண்டு பேசினார். ''சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், அரசுப் பள்ளிகளை அடுத்தடுத்து மூடப்படுவதின் மூலம் தனியார் பள்ளிகளுக்கு மறைமுகமாக உதவுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களின் எண்ணிக்கை 52 லட்சத்தில் இருந்து 38 லட்சமாகக் குறைந்துவிட்டது. தனியார் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 17 லட்சம் அதிகரித்துள்ளது. இதைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் தீவிரம் அடையும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சட்ட மன்ற உறுப்பினர் சௌந்தரராஜன் பேசுகையில், ''சென்னை மாநகராட்சிநிர்வாகம் கல்வி வரி என்ற பெயரில் கடந்த 8 ஆண்டுகளில் 175 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதில் சொற்ப அளவு மட்டுமே கல்விக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் ''என்று சௌந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago