ஸ்ரீரங்கம் திமுக வேட்பாளராக என்.ஆனந்த் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக என்.ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர்.

தமிழகத்தில் காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.

வழக்கமாக தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அதிமுகதான் முதலாவதாக வேட்பாளரை அறிவித்து, பிரச்சாரத்தையும் தொடங்கும். இந்த முறை அதிமுகவை முந்திக்கொண்டு ஸ்ரீரங்கம் தொகுதிக்கான வேட்பாளரை திமுக அறிவித்துள்ளது. கடந்த 2011-ல் இதே தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட என்.ஆனந்த், திமுக சார்பில் இங்கு மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த தேர்தலில் 63,480 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தவர். 34 வயது பட்டதாரியான ஆனந்த், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். மனைவி, ஒரு மகள் உள்ளனர். 2000-ம் ஆண்டில் திமுகவில் இணைந்த இவர், தற்போது மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆனந்த், திமுக தலைவர் கருணா நிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் 1967 முதல் 2011 வரை நடந்த 11 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக 7 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக ஒரே ஒருமுறை மட்டும் (1996 - மாயவன்) வெற்றி பெற்றது.

வேட்பாளராக ஆனந்த் தேர்வு செய்யப்பட்டது குறித்து திமுக வட்டாரங்கள் கூறியதாவது:

ஜெயலலிதா போட்டியிட்டு வென்று பதவியிறக்கம் செய்யப் பட்ட தொகுதி என்பதால், ரங்கத் தில் கண்டிப்பாக போட்டியிட வேண்டும். இல்லாவிட்டால், கட்சியின் செல்வாக்கு சரிந்து விடும் என்று கருதிய திமுக தலைமை, இடைத்தேர்தல் தேதி அறிவித்ததும் திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என்.நேருவை சென்னைக்கு வரவழைத்து ஆலோ சனை நடத்தியது. கருணாநிதியுடன் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின் மற்றும் சில மூத்த நிர்வாகிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். இதில் எடுத்த முடிவின்படி, வேட்பாளராக என்.ஆனந்த் அறிவிக்கப்பட்டார்.

இத்தொகுதியில் பெரும்பான் மையாக முத்தரையர் மற்றும் ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். உடையார், வெள்ளா ளர், பிராமணர், இஸ்லாமியர்கள், முக்குலத்தோர் ஆகியோரும் கணிசமான அளவுக்கு உள்ளனர். திமுக வேட்பாளர் ஆனந்த், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அந்த அடிப்படையில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வேட்பாளர் ஆனந்த் கூறும் போது, ‘‘ஸ்ரீரங்கம் தொகுதி யில் ஏற்கெனவே போட்டியிட்டுள் ளதால் தொகுதியில் எனக்கு நல்ல அறிமுகம் உள்ளது. அதனடிப்படையில் கட்சித் தலைமை என்னை வேட்பாளராக அறிவித்துள்ளது. ஸ்ரீரங்கம் எனது சொந்த ஊர். இந்தத் தேர்தலில் எனது வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்