ஸ்ரீரங்கத்தில் போட்டியா?- பாமக இன்று முடிவு

By செய்திப்பிரிவு

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாமக நிலைப்பாடு குறித்து சென்னையில் இன்று (ஜன. 20) நடைபெறும் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத் தில் முடிவு செய்யப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு குறித்து சென்னையில் இன்று கூடும் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும். ‘ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை அனைவரும் ஆதரிக்க வேண்டும்’ என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியதை நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசி முடிவெடுப்போம்.

வேளாண் விளை பொருட் களுக்கு விலை நிர்ணயம் செய்ய ஆணையம் அமைக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். தற்போது, ஆந்திர அரசு இதற்கு செயல்வடிவம் கொடுத்துள்ளது. தமிழகத்திலும் ஆணையம் அமைக்கவேண்டும்.

ஜல்லிக்கட்டு குறித்து மேனகா காந்தி கூறி இருப்பது வருத்தம் அளிக்கிறது. அவர் அபத்தமாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்த பின், எந்த துறையிலும் தமிழகம் முன்னேறவில்லை. ஊழலில் மட்டும் முன்னேறியுள்ளது.

ஊழல் புகார்

எனது தலைமையில் மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவினர் தமிழக ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து ஊழல்கள் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்க வலியுறுத்தவுள்ளோம்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. மேலும், ‘அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்’ என்று சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாநகராட்சி யில் ஊழல் தலைவிரித்தாடுவ தாகத் தெரிகிறது. வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளன. மாநக ராட்சி ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும். ‘சேலம் மாவட்டத்தில் 3 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட் டுள்ளதாக’ திமுக தலைவர் கருணா நிதி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் விசாரித்து போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்.

விளக்க வேண்டும்

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, ஜெயலலிதாவை நேற்று முன் தினம் சந்தித்துள்ளார். நீதி மன்ற தண்டனையால் ஜெயலலிதா பதவி இழந்துள்ளார். அவரது மேல் முறையீடு மனு மீது விசாரணை நடந்து வரும் நிலையில் அருண் ஜேட்லி அவரைச் சந்தித்து இருப் பதை சாதாரணமாகக் கருத முடி யாது. இதுகுறித்த சந்தேகங்களுக்கு அருண் ஜேட்லித்தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார் அவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE