சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஜனவரி 18 மற்றும் பிப்ரவரி 22 ஆகிய தேதிகளில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஜனவரி 18 மற்றும் பிப்ரவரி 22 ஆகிய தேதிகளில் குழந் தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க மத்திய அரசு சுகாதாரத்துறை உத்தர விட்டுள்ளது.
இதையொட்டி மேற் கூறிய தேதிகளில் சென்னை மாநக ராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங் களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந் தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப் பட்டுள்ளது.
இது குறித்து மாநில சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்த தாவது:
மாநகரப் பகுதியில் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 6 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். இப்பணியில் சுகாதாரத்துறையினர், அங்கன்வாடி ஊழியர்கள், தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் என சுமார் 7 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago