மோடியை காத்திருந்து சந்தித்த வைகோ
ஆனால், தொகுதிப் பங்கீடு இறுதியாகாததால் கூட்டத்தில் பங்கேற்கும் முடிவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திடீரென மாற்றிக் கொண்டார்.
அவரது சார்பில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா மட்டும் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனாலும், நரேந்திர மோடியுடன் வைகோவை சந்திக்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வந்தன.
சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் சனிக்கிழமை இரவு நரேந்திர மோடி தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் வைகோ, இந்த ஓட்டலுக்கு வந்து காத்திருந்தார். அவருடன் மதிமுக பொருளாளர் மாசிலாமணி உள்ளிட்ட சில நிர்வாகிகளும் வந்திருந்தனர்.
பொதுக்கூட்டம் முடிந்து ஓட்டலுக்கு மோடி வந்ததும் அவரை வைகோ சந்தித்துப் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, சனிக்கிழமை இரவு மோடியை சந்தித்துப் பேசினார் வைகோ.