திருச்சி மாவட்டம் முசிறி அருகே மரத்தில் வேன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். குலதெய்வம் கோயிலுக்குச் சென்றபோது நிகழ்ந்த இந்த விபத்தில் மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.
திருச்சி எடலைப்பட்டி புதூர் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (74). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர், நேற்று காலை குடும்பத்தாருடன் முசிறி அருகே மங்கலம் என்ற இடத்தில் உள்ள குலதெய்வக் கோயிலான அரவாய் அம்மன் கோயிலுக்கு வேனில் சென்றார். வேனில் 12 பேர் பயணம் செய்துள்ளனர்.
முசிறி அருகே ஏவூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்ற போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டையிழந்த வேன் சாலையோரமுள்ள தென்னை மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில், வேனில் சென்ற கல்யாணசுந்தரம், அவரது மனைவி புஷ்பமாலா (65), தாயார் தனலட்சுமி (90), தம்பி உதயகுமார் (60), பேத்தி பவதாரிணி (8) ஆகியோர் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், ரங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பாபு உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீஸார் சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் முசிறி மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
முசிறி டி.எஸ்.பி. செந்தில்வேல், இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீ ஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அமைச்சர் பூனாட்சி, முசிறி அரசு மருத்துவமனைக்குச் சென்று, பலியானவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். விபத்து குறித்து முசிறி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago