ஐஏஎஸ் அதிகாரி சுப்பையா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்க உதவிய வழக்கில் வைகுண்டராஜன் மற்றும் அவரது சகோதரருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இவ்வழக்கில் முதல் எதிரியான ஐஏஎஸ் அதிகாரி சுப்பையாவை இன்னும் கைது செய்யாமல் இருப்பது ஏன்? கைதான சுப்பை யாவின் சகோதரரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெறாதது ஏன் என சிபிஐக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக் குழு தலைவராக இருந்தவர் சுப்பையா. இவர் பதவி காலத்தில் ரூ.8.23 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிபிஐ போலீ ஸார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில் சுப்பையா சொத்து குவிப்பதற்கு உதவியதாக விவி மினரல்ஸ் பங்குதாரர்களான வைகுண்டராஜன், அவரது சகோதரர் ஜெகதீசன் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இவ்வழக்கில் வைகுண்டராஜன், ஜெகதீசன் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு ஏற்கெனவே மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை உயர் நீதிமன்றம் நவ. 7-ல் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் வைகுண்ட ராஜன், ஜெகதீசன் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்குப் பின் நீதிபதி கூறியதாவது: இந்த வழக்கு 2012ல் பதியப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி சுப்பையா முதல் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவரை இன்னும் கைது செய்யவில்லை. அவரது சகோதரரை கைது செய்துள்ளனர். ஆனால் அவரது வாக்குமூலத்தை பதியவில்லை. காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமைக் காவலருக்குக்கூட, கைது செய்யப்படுபவரிடம் வாக்குமூலம் பெற்று பதிய வேண்டும் என்பது தெரியும்.
சிபிஐக்கு தெரியாமல் போனது ஏன்? சுப்பையாவை கைது செய்யாதது ஏன்? அவர் பதவி உயர்வு பெற்று மேற்குவங்கத்தில் தகவல் தொழில்நுட்ப செயலராக உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் அமைச்சரவை செயலராகக்கூட வாய்ப்புள்ளது. சிபிஐ செயல்பாடு ஆச்சர்யமாக உள்ளது.
இதில் முதல் எதிரியை கைது செய்யவில்லை. கைது செய்தவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பதியவில்லை. வைகுண்டராஜனுக்கு சிபிஐ அனுப்பிய சம்மன் திரும்பப் பெறப்பட்டுள்ளது. எனவே, இருவருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. முன்ஜாமீன் நிபந்தனைகள் குறித்து ஓரிரு நாளில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago