டெங்கு காய்ச்சல் பலி 18 ஆக உயர்வு: ராஜபாளையத்தில் அமைச்சர்கள், அரசு செயலர்கள் நேரில் ஆய்வு

By செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டம், ராஜபாளை யத்தில் டெங்கு காய்ச்சல் காரண மாக நேற்று முன்தினம் வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இதை யடுத்து, 3 அமைச்சர்கள், அரசு துறை செயலர்கள், மருத்துவத் துறை அதிகாரிகள் ராஜபாளை யத்தில் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளனர்.

ராஜபாளையத்தில் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, திருவள்ளுவர் நகர், ராம் நகர், சக்தி நகர், தென்றல் நகர் ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் ஏராளமான கொசு உற்பத்தி காரணமாவே காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சங்கர் என்பவரது மகள் ஹன்சினி(5) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். இச்சிறுமி திடீரென ரத்த வாந்தி எடுத்து கடந்த மாதம் 20-ம் தேதி இறந்தார்.

இதைத் தொடர்ந்து, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜபாளையம் எம்.ஆர். நகரைச் சேர்ந்த உத்தண்டம் மகள் கார்த்திகா (10) கடந்த மாதம் 25-ம் தேதி இறந்தார்.

இவர்களைத் தொடர்ந்து, ராஜ பாளையம் அழகை நகரைச் சேர்ந்த பால்பாண்டி மகள் சிவசந்தியா(3), திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம் மீனாட்சி தோட்டத் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயக்குமார் மகன் செல்வகணேஷ்(2), ராஜ பாளையம் பண்டிட் சுப்பையா தெருவைச் சேர்ந்த முருகேசனின் ஒன்றரை வயது மகன் சுந்தர பாண்டியன், துரைசாமியா புரத்தைச் சேர்ந்த குருசாமி மகன் கார்த்திக்(15), மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன் மகள் அனு(4), மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகள் வனிதா(22), அருப்புக்கோட்டை அருகேயுள்ள ஆத்திப்பட்டியைச் சேர்ந்த பூமிராஜ் மகன் வெற்றிவேல் (3) என அடுத்தடுத்து நேற்று முன்தினம் வரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந் நிலையில், டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜ பாளையம் அருகேயுள்ள சொக்க நாதன்புத்தூரைச் சேர்ந்த சண்முகநாதனின் 8 மாத குழந்தை சுபாஷ்குமார், கிழவிகுளத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சரவணக்குமார் (8) ஆகியோர் நேற்று இறந்தனர். அதையடுத்து பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் எம்.பி., சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ராஜாராமன், மாநில சுகாதாரத் திட்ட இயக்குநர் சண்முகம், நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், கோபால்சாமி எம்.எல்.ஏ. ஆகியோர் ராஜபாளை யத்தில் 25, 27, 39, 40 ஆகிய வார்டுகளில் நேற்று கொசு ஒழிப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது சுகாதாரத் துறை, நகராட்சி, அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். மேலும், பொது மக்களிடம் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங் களை வழங்கினர்.

அப்போது, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:

ராஜபாளையம் நகரில் 500 களப் பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒரு வார்டுக்கு ஒரு நகராட்சி ஆணையர், ஒரு சுகாதார அலுவலர், ஒரு சுகாதாரப் பணியாளர் தலைமையில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்