இன்றைய மாணவர்கள் தன்னம் பிக்கையை வளர்த்து கொள்ள பாடப் புத்தகங்களோடு மற்ற புத்த கங்களையும் படிக்க வேண்டும் என்று தமிழக கடலோர காவல் படையின் ஏடிஜிபி சி. சைலேந்திர பாபு வலிறுத்தியுள்ளார்.
தென்னிந்திய புத்தக விற்பனை யாளர் மற்றும் பதிப்பாளர்கள் கூட்டமைப்பு (பபாசி), சென்னை இலக்கியச் சங்கம் மற்றும் சென்னை புக் கிளப் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த ‘சென்னை வாசிக்கிறது’ என்ற தலைப்பில் மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நேற்று அண்ணாநகர் டவர் பூங்காவில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந் தினராக கலந்து கொண்ட தமிழகக் கடலோரக் காவல் படை யின் ஏடிஜிபி சைலேந்திரபாபு பேசிய தாவது:
“தற்போது முன்னேறி வரு கின்ற இந்த காலம் அறிவு களஞ்சி யங்களை கொண்ட உலகம் ஆகும். இந்த அறிவு உலகத்தில் மாண வர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள பாடப் புத்தகங் களையும் தாண்டி மற்ற புத்தகங்க ளையும் படிக்க வேண்டியது அவசி யம் ஆகும்.
பெரிய அறிஞர்களுடைய சுய சரிதைகள், சுயமுன்னேற்றத்தை வளர்த்து கொள்ளும் புத்தகம் மற்றும் நாவல் ஆகியவற்றை இன் றைய தலைமுறையினர் கண்டிப் பாக படிக்க வேண்டும். தினமும் குறைந்தது 2 மணி நேரமாவது புத்தகங்களுக்காக ஒதுக்க வேண்டும். வாழ்க்கையில் முன் னேறுவதற்கு பாடப் புத்தகங்கள் மட்டும் போதாது. இதர புத்தகத் தையும் படித்தால்தான் மற்றவர்களுடைய மரியாதையை பெற முடியும். புத்தக வாசிப்பை சுகமான மற்றும் சுலபமான ஒரு அனு பவமாக மாணவர்கள் கருத வேண் டும்”. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பபாசி தலைவர் மீனாட்சி சோமசுந்தரம் , செயலாளர் கே. எஸ். புகழேந்தி, சென்னை இலக் கியச் சங்கத் தலைவர் ஜி. ஒளி வண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடற்கரை பகுதிகளில் 30 காவல் நிலையங்கள்
நிகழ்ச்சிக்குப் பிறகு நிருபர் களிடம் பேசிய ஏடிஜிபி சைலேந்தி ரபாபு, ‘‘தற்போது தமிழகத்தில் 12 கடலோர காவல் நிலையங்கள் உள்ளன. மேலும் 30 கடலோர காவல் நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் தீவிரவாதிகளின் ஊடுரு வலை தடுக்கும் அம்லா எனப்படும் பாதுகாப்பு ஒத்திகையை இந்த வருடம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago