பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளன பெருமாள் முருகன் புத்தகங்களை அரசு தடை செய்ய வேண்டும்: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோரிக்கை

By செய்திப்பிரிவு

தமிழ் பெண்களை இழிவுபடுத்தியும், கொச்சைப்படுத்தும்படியும் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ள புத்தகங்களை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித் துள்ளார்.

இது தொடர்பாக அவர், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று அளித்த பேட்டி: எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ என்ற புத்தகத்தில் திருச்செங்கோடு பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமான வார்த்தைகளை உபயோகித்து அநாகரிகமாக எழுதியுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் போராடி வருகின்றனர். அதேபோல அவர் எழுதியுள்ள ‘ஆளண்டா பட்சி’, ‘அர்த்தநாரி’, ‘ஆலவாயன்’ போன்ற புத்தகங்களிலும் தமிழ் பெண்களை இழிவு படுத்தும் விதமாகவும், கொச்சைப் படுத்தும்படியும் எழுதியுள்ளார். தமிழக அரசு உடனடியாக அவர் எழுதிய 4 புத்தகங்களையும் விற்பனைக்கு தடை செய்ய வேண்டும். அதன்பின் விசாரணை நடத்தி புத்தகங்களை முழுமை யாக தடை செய்ய வேண்டும். இல்லையென்றால் திருச்செங் கோட்டில் நடக்கும் போராட்டம், தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்படும்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற் கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. ஜல்லிக் கட்டு நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறோம். ரங்கம் இடைத் தேர்தலில் பாஜக நிறுத்தும் வேட்பாளரை ஆதரிப்போம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்