ரிப்பன் மாளிகை முன்பு மார்க்சிஸ்ட் போராட்டம்

By செய்திப்பிரிவு

மூடப்பட்டுள்ள மாநகராட்சிப் பள்ளிகளை திறக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரிப்பன் மாளிகை முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் க.பீம்ராவ், ஏ.சவுந்தரராஜன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தின்போது ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:

மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களில் 14 லட்சம் குறைந்துள்ளது. அதே நேரம் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 17 லட்சம் அதிகரித்துள்ளது. சென்னையில் 2001-ம் ஆண்டில் இருந்து இதுவரை 54 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த பள்ளிகளை மீண்டும் திறக்க மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட க.பீம்ராவ் கூறும்போது, “திமுக ஆட்சி காலத்தில் மூடப்பட்ட மாநகராட்சிப் பள்ளிகளை தற்போதுள்ள ஆட்சியாளர்கள் திறக்கவில்லை என்றால், இவர்களும் அதே கொள்கையை பின்பற்றுகிறார்கள் என்றுதானே அர்த்தம். பள்ளிகளில் காலியாக உள்ள 168 ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி, அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் செய்து தர வேண்டும்,” என்றார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரிப்பன் மாளிகைக்குள் நுழைய காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்