இலங்கை சிறைகளில் இருந்த காரைக்கால் மீனவர்கள் 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கையில் ராஜபக்ச அதிபராக இருந்தபோது ஜூன் மாதம் முதல் கடைசி ஏழு மாதங்களில் அந்நாட்டுக் கடற்படையினர் 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களையும், 87 படகுகளையும் சிறைபிடித்தனர். இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மீனவர்கள் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மீனவர்களை விடுதலை செய்யுமாறு இலங்கை அரசுக்கு மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதையடுத்து மீனவர்களை மட்டும் இலங்கை அரசு விடுவித்து வந்தது. ஆனால், படகுகளை விடுவிக்கவில்லை. இந்நிலையில், ஜனவரி மாதம் 9-ம் தேதி நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவை வீழ்த்தி ஜனநாயக முன்னணி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்றார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்ததோடு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். இதை ஏற்று சிறிசேனா பிப்ரவரி மாதம் இந்தியா வர உள்ளார்.
இந்தியா - இலங்கை இடையே நல்லெண்ண நடவடிக்கையை அதிகரிக்கும் வகையில் இலங்கை சிறைகளில் உள்ள 15 காரைக்கால் மீனவர்களையும், கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட 87 படகுகளையும் விடுவிக்க நடிவடிக்கை எடுத்து வருவதாக அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், காரைக்கால் மீனவர்கள் 15 பேர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட 87 படகுகளை விடுவிப்பதற்கான தீர்ப்பு இலங்கை நீதிமன்றங்களில் திங்கட்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago