சென்னை விமான நிலையத்தில் பொறியாளரின் மூக்கை உடைத்த விமானி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து பாரிஸ் செல்லும் ஏர் இந்தியா விமானம் நேற்று காலை புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தின் சில பாகங்களை பொறியாளர் கண்ணன் சரிசெய்துகொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த விமானி மாணிக்லால், விமானம் புறப்படுவதற்கு நேரமாகி விட்டது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் விமானி மாணிக்லாலுக்கும், பொறியாளர் கண்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் விமானி மாணிக்லால், கண்ணனைத் தாக்கினார். இதில் கண்ணனின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. விமான நிலைய மருத்துவமனையில் அவர் உடனடியாக சேர்க்கப்பட்டார்.
பொறியாளர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் வந்தபோது மாணிக்லால் விமானத்துக்குள் ஏறி விமானி அறையில் அமர்ந்து அதன் கதவைப் பூட்டிவிட்டார். அவரை விமானி அறையில் இருந்து வெளியே கொண்டுவர ஒரு மணிநேரத்துக்கும் மேல் ஆனது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு விமானத்தில் இருந்து வெளியே வந்த மாணிக்லாலிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரை பணியிடை நீக்கம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து வேறொரு விமானி வரவழைக்கப்பட்டு சுமார் 2 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago