திரைப்படங்களில் தவறாக சித்தரிப்பதை தடுக்க கோரிக்கை: தணிக்கைக் குழு அலுவலகம் முன்பு திருநங்கைகள் இன்று போராட்டம்

By செய்திப்பிரிவு

திரைப்படங்களில் திருநங்கைகளை தவறாக சித்தரிப்பதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் உள்ள தணிக்கை குழு அலுவலகம் முன்பு திருநங்கைகள் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'ஐ' திரைப்படத்தில் ஒஜாஸ் ரஜானி என்ற திருநங்கை நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராய் உட்பட பிரபல இந்தி நடிகை, நடிகர்கள் பலருக்கு இவர் ஒப்பனைக் கலைஞராக இருக்கிறார். ‘ஐ' திரைப்படத்தில் இவர் ஒப்பனைக் கலைஞராகவே நடித்திருக்கிறார். ‘ஐ' படத்தில் அவரை திருநங்கை என்று அவமானப்படுத்துவதுபோல காட்சிகள் இருக்கும்.

திருநங்கைகளை தவறாக சித்தரித்ததற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து 'திருநங்கையர் மற்றும் திருநம்பியர் உரிமை குழு' ஒருங்கிணைப்பாளர் பானு கூறியதாவது:

திரைப்படங்களில் திருநங்கை களை கேவலமாக சித்தரிப்பது அதிகரித்துவிட்டது. சங்கர் போன்ற இயக்குநர்கள்கூட இந்த தவற்றை செய்வது வருத்தமாக இருக்கிறது. 'ஐ' படத்தில் திருநங் கைகளை மிகவும் தவறாக சித்தரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை பார்க்கச் சென்ற என்னையும் பலர் கிண்டல் செய் தனர். ஒரு திரைப்படம் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு இதுவே உதாரணம்.

திருநங்கைகள் என்றாலே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் வழக்கம் நம் சமூகத்தில் உள்ளது. இப்படத்தை பார்ப்பவர்கள் அனைவருக்கும் அந்த தவறான கண்ணோட்டத்துக்கு உயிர் கொடுப்பதுபோல உள்ளது. மத்திய, மாநில அரசுகள் திருநங்கை களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் திரைப்படத் தணிக்கை குழுவில் இடம்பெற்று, திருநங்கைகளை கொச்சைப்படுத்தும் காட்சிகளை நீக்க முடியும்.

திரைப்படங்களில் திருநங்கை களை கொச்சைப்படுத்தும் காட்சி களுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திரைப்பட தணிக்கைக் குழு அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று (திங்கள் கிழமை) காலை 10 மணிக்கு சாஸ்திரிபவன் முன்பு போராட்டம் நடத்தப்போகிறோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்