ஆசிரியர் ஊதிய விவகாரம்: அரசுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை

By செய்திப்பிரிவு

மத்திய அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று தமாக (மூப்பனார்) தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை விவரம்: ‘தமிழகத்தில் பணிபுரியும் இடை நிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக ஊதி யம் வழங்க வேண்டும். தர ஊதி யம் ரூ. 4,200 வழங்க வேண் டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி ஆசிரியர் கூட்டணியினர் அர சையும், உயர் நீதிமன்றத்தையும் அணுகினர். இதற்கு, 8 வாரங்க ளுக்குள் தக்க பதில் தர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தமிழக அரசை அறிவுறுத்தியது.

இதன்படி, பரிசீலனை செய்த தமிழக அரசு, கூடுதல் செலவு ஏற்படும் என்றும் கூறி மறுத்தது. இதையடுத்து, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும், தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக் கங்களின் கூட்டமைப்பும் போராட் டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. நிதிச் சுமையைக் காரணம் காட்டி, கிராமங்களில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு பள்ளிகளுக்கு இணையான ஊதியம் வழங்க மறுப்பது தவறாகும். மேலும், தரவூதியம் ரூ. 4,200 வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் வாசன் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்