வேலூர் மத்திய சிறைக்குள் கஞ்சா, கத்தி, செல்போன் வீச முயன்ற இருவர் கைது

By செய்திப்பிரிவு

வேலூர் மத்திய சிறைக்குள் கஞ்சா, கத்தி, செல்போன், சிகரெட் பாக்கெட் என தடை செய்யப் பட்ட பொருட்களை வீச முயன்ற 2 பேர் நேற்று கைது செய்யப் பட்டனர்.

வேலூர் ஆண்கள் மத்திய சிறை வளாகத்துக்கு அருகில் மூன்று இருசக்கர வாகனங்களில் இளை ஞர்கள் சிலர் சந்தேகப்படும் படியாக நேற்று மாலை திரிந்து கொண்டிருந்தனர். இரண்டு பேர் சில பொருட்களை சிறைக்குள் வீச முயன்றனர். அப்போது அந்த பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலர்கள் சிலர் அவர்களை விரட்டிச் சென்றனர். ஒரு இளைஞர் தப்பி ஓடிய நிலையில் இரண்டு பேர் மட்டும் சிக்கினர்.

விசாரணையில், அவர்கள் வேலூர் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (27), அரக்கோணத்தைச் சேர்ந்த ஹரி (23) என தெரியவந்தது. பின்னர், இருவரும் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த பையை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில், 12 செல்போன்கள், 3 சிம் கார்டுகள், 3 கனெக்டர்கள், ஒரு சார்ஜர், 400 கிராம் கஞ்சா, 3 ஹெட் ஃபோன்கள், 6 பாக்கெட் சிகரெட்கள், 6 பேனா ரக கத்திகள், 6 லைட்டர்கள் இருந்தன. அவர் களிடம் 2 இருசக்கர வாகனங் கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிறைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘சிறையில் உள்ள சிலர் தடை செய்யப்பட்ட பொருட் களை வெளியில் இருந்து கடத்த திட்டமிட்ட தகவல் எங்களுக்கு கிடைத்தது. இதையடுத்து, சிறைக்கு பின்புறம் உள்ள பகுதியில் சாதாரண உடையில் சிறைக் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பொருட்களை வீசமுயன்ற 3 பேரில் 2 பேர் மட்டும் சிக்கினர். எங்களிடம் சிக்கியுள்ள சிலம்பரசன் ஏற்கெனவே வழிப்பறி வழக்கில் கைதானவர். ஹரி குறித்தும், தப்பி ஓடிய நபர் குறித்தும் விசாரித்து வருகிறோம். பிடிபட்ட இரண்டு பேரிடம் இருந்து ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை பாகாயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்