போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்காக 11 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக இதுவரை 11 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில், 12-வது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
நிதித்துறை செயலாளர், மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக இயக்குநர்கள் என மொத்தம் 11 பேர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இது தொடர்பான அரசாணையில், "அரசு போக்குவரத்துக் கழகங்கள் - அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு தொழிற்தகராறு சட்டம், 1974 பிரிவு 12(3)-ன் கீழ் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை- 12வது ஊதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்கு நிர்வாக தரப்பில் குழு ஒன்று அமைத்து ஆன்ணை வெளியிடப்பட்டுள்ளது.
12-வது ஊதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையினை உடனடியாக துவக்குமாறு பல்வேறு தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. கடந்த 30.12.2014 அன்று 12-வது ஊதிய ஒப்பந்ததிற்கான பேச்சுவார்த்தைக்கு அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என தொழிலாளர் முன்னேற்றச் சங்க பேரவை கடிதம் அளித்தது.
அனைத்து போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை அரசு கவனத்துடன் பரிசீலனை செய்து, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 12-வது ஊதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையில் நிர்வாக தரப்பில் கலந்து கொள்வதற்கு 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போக்கு வரத்து தொழிற்சங்கத்தினர் கடந்த 28-ம் தேதி முதல் 4 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால், அரசு பஸ்களின் சேவை குறைந்து பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago