புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

ஆங்கிலப் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுவதையொட்டி தமிழக ஆளுநர், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர் கள் வாழ்த்துக்களை தெரிவித் துள்ளனர்.

தமிழக ஆளுநர் கே.ரோசய்யா:

மகிழ்ச்சி பொங்கும் புத்தாண்டில் தமிழக சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயப்பூர்வமான புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய ஆண்டு, அறியாமை இருளை நீக்கட்டும். ஒற்றுமையை வலுப்படுத்தட்டும், அமைதியையும் வளமையையும் கொண்டுவரட்டும். உலக அரங்கில் அனைத்து துறைகளிலும் நம் நாட்டை மேலோங்கச் செய்திட அனைவரும் ஒன்றிணைவோம்.

திமுக தலைவர் கருணாநிதி:

தமிழ் சமுதாயம் கடந்த சட்ட மன்ற, நாடாளுமன்ற தேர்தலில் ஆராயாமல் அவசரப்பட்டதால் தமிழகம் அடிப்படை கட்டமைப் புகளில், உற்பத்தியில், தொழில் வளர்ச்சியில் பின்தங்கி விட்டது. இந்த அவலம் களையப்படவும், பின்னடைவுகளிலிருந்து தமிழகத்தை மீட்டு முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும் ஒன்றிணைந்து உழைத்திடுவோம். அதற்கு புத்தாண்டு 2015 வழிவகுக்கும் என்று உறுதியுடன் நம்புகிறேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

இந்த புத்தாண்டு இருண்ட கண்டத்திலிருந்து வெளியேறி வெளிச்சத்துக்கு வரும் ஆண்டாக தமிழகத்துக்கு அமைய வேண்டும். சாதி, மத, இன, மொழி வேறுபாடின்றி சமதர்ம சமுதாயம் அமைந்திட வேண்டும். மக்கள் விரோத போக்கை கடைப்பிடிக்கும் ஆட்சியை அகற்றி மக்கள் விரும் பும் நல்லாட்சி அமைய வேண்டும்.

தமிழக காங். தலைவர் இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் பாரிவேந்தர், இந்திய தேசிய முஸ்லீம் லீக் அமைப் பின் மாநிலத் தலைவர் ஓய்.ஜவஹர் அலி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்