‘மீட்டரா... போடமாட்டேன்’ என்று கூறி வாய்க்கு வந்த கட்டணத்தை கேட்கும் ஆட்டோ ஓட்டுநர்களைச் சந்திக்காத சென்னைவாசி இருக்க முடியாது. ‘சென்னையில் இருப்ப தைப்போல ஆட்டோ ஓட்டுநர்களின் அடாவடி வேறு எங்குமே இல்லை’ என்ற வெறுப்புக் குரல் அனைத்துத் தரப்பிலும் எழுந்ததையடுத்து, இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றது.
கட்டண நிர்ணயம்
உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் சென்னையில் ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
முதல் 1.8 கிமீ-க்கு ரூ. 25 குறைந்தபட்ச கட்டணம், அடுத்த ஒவ்வொரு கி.மீ. தொலைவுக்கும் தலா ரூ. 12, காத்திருப்புக் கட்டண மாக 5 நிமிடங்களுக்கு ரூ. 3.50, இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை 50 சதவீதம் கூடுதல் கட்டணம் என்று நிர்ணயிக்கப்பட்டது.
மேலும், ஆட்டோக்களில் கட்டாயம் மீட்டர் பொருத்த வேண் டும் என்றும், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, ஆட்டோக்களில் டிஜிட்டல் மீட்டர் பொருத்துதல், ஜிபிஎஸ் உதவியுடன் அவசர பட்டன் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த 80 கோடி ரூபாய்க்கு தமிழக அரசு திட்டம் தீட்டியது.
தொடரும் கூடுதல் கட்டண வசூல்
சென்னையில் மொத்தம் 72 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கு கின்றன. உச்ச நீதிமன்றத்தின் தலையீடு, தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகள், போலீஸாரின் கண்டிப்பு என பல நடவடிக்கைகள் இருந்தும், சென்னையில் மீட்டர் கட்டணம் இன்னும் முழுமையாக அமலுக்கு வரவில்லை. கூடுதல் கட்டண வசூல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
சென்னை எழும்பூர் ரயில் நிலைய வாசலில் ‘மீட்டர் போடும் ஆட்டோக்கள்’ என்ற தனிப் பாதையை போக்குவரத்து போலீ ஸார் ஏற்படுத்தி உள்ளனர். இந்த வரிசையில் வரும் ஆட்டோ ஓட்டுநர்கள், பயணிகளிடம் பேரம் பேசாமல் மீட்டர் கட்டணத்தை வாங்கிக் கொள்கின்றனர். ஆனால், பெரும்பாலான ஆட்டோக்கள் அந்தப் பாதையில் நுழைவதேயில்லை.
கடனை அடைக்க முடியவில்லை
மீட்டர் கட்டண முறைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டும் ரஹமத்துல்லா கூறும்போது, ‘நான் மீட்டருக்கு மேல ஒரு பைசா கூட வாங்குவதில்லை. எழும்பூரில் இருந்து மஹாராணிக்குச் சென்றேன். ரூ. 94 கட்டணம் வந்தது. பின்னர், அங்கிருந்து எழும்பூருக்கு காலியாக வந்தேன். இதனால், நஷ்டம்தான்.
அதேபோல, போக்குவரத்துத் துறை அதிகாரிகளும், போலீஸாரும் ஷேர் ஆட்டோக்களை கண்டுகொள் ளாமல் எங்களிடம் மட்டும் கெடுபிடி செய்கின்றனர்.
நாங்கள் கேட்டவாறு 1.5 கி.மீ.-க்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ. 30 என்று நிர்ணயித்திருந்தால் கட்டுப்படியாகும். இப்போதுள்ள கட்டணத்தால் ஒரு வருடமாக ஆட்டோ வாங்கிய கடனை என்னால் அடைக்க முடியவில்லை’என்றார் வருத்தத்துடன்.
தமிழக அரசே காரணம்
தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநிலப் பொதுச் செயலர் ஜெ. சேஷசயனம் கூறும் போது, ‘கட்டணம் நிர்ணயம் செய்தபோது, ஆட்டோ பிரச்சி னையை அவ்வப்போது பேசித் தீர்க்க முத்தரப்பு கமிட்டி அமைக்க வும், ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத் தவும் தமிழக அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், இதுவரை அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை.
அதேபோல, சில அலுவலர் களின் ஆசியுடன் ஏராளமான கால் டாக்ஸி, ஷேர் ஆட்டோ, அபே ஆட்டோக்கள் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன.
சென்னையில் 25 சதவீத ஆட்டோக்கள் மட்டுமே மீட்டர் போட்டு ஓட்டி வரும் நிலையில், கட்டண நிர்ணயத்தின்போது அளித்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்றாததால் அவர்களும் மீண்டும் கூடுதல் கட்டணம் வசூலிக் கத் தொடங்கியுள்ளனர். ஆட்டோ ஓட்டுநர்கள் திருந்த விரும்பினாலும், அரசின் செயல்பாட்டால் அவர்களால் திருந்த முடியவில்லை. அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நாங்கள் தொடர்ந்த வழக்கு, சில நாட்களில் விசாரணைக்கு வரவுள்ளது’என்றார்.
மொத்தத்தில், சென்னையில் மீட்டர் கட்டணத்தில் ஆட்டோக்கள் இயங்குவது என்பது இன்றளவும் கனவாகவே உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago