காலிப்பணியிடங்களால் நுகர்வோர் வழக்குகள் தேக்கம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களில் காலிப்பணியிடங் கள் அதிகமாக உள்ளதால் ஆயிரக் கணக்கான வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் கூறி யுள்ளார்.

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சார்பாக ‘நுகர்வோர் பார்வையில் நுகர்வோர் நீதிமன்றங் கள்’ என்ற தலைப்பில் நேற்று விழிப் புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் பேசியதாவது:

நுகர்வோர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை 90 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். ஆனால் நுகர்வோர் நீதிமன்றங் களில் போதிய எண்ணிக்கையில் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் இல்லாத கார ணத்தால் வழக்குகள் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்படாமல் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நுகர்வோர் அமைப்பின் தலைவர் பால் பர்ணபாஸ் பேசும்போது, “மாநிலத்தில் மொத்தம் 33 நுகர் வோர் நீதிமன்றங்கள் உள்ளன. ஆனால் இந்த நீதிமன்றங்களில் களப்பணியாளர்கள் காலிப்பணி யிடங்கள் மட்டும் 200 உள்ளன’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்