தமிழகம் முழுவதும் அதுகரித்து வரும் டெங்குவின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்துயுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகம் முழுவதும், குறிப்பாக தென் மாவட்டங்களில் சில மாதங்களாக டெங்குவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
ஆனால், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான மருத்துவம் அளிப்பதற்குக் கூட தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்விளைவு தான் ஒரே நாளில் 3 குழந்தைகள் உயிரிழக்கும் அளவுக்கு நிலைமை மோசம் அடைந்திருக்கிறது.
டெங்கு காய்ச்சலை முற்றிலுமாக தடுத்து விட முடியாது என்ற போதிலும் அதைக் கட்டுப்படுத்தக் கூட தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலைமையை மாற்ற தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களிலும் இரத்தத் தட்டு செலுத்தும் வசதியுடன் கூடிய சிகிச்சைக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
டெங்கு காய்ச்சலை தடுக்கும் நோக்குடன் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். அதேபோல், பொதுமக்களும் டெங்கு அறிகுறிகள் தென்பட்டாலே தாமதம் செய்யாமல் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
டெங்கு காய்ச்சலை தடுக்கும் ஆற்றல் நில வேம்பு கஷாயத்திற்கு உண்டு என்பதால், மக்களுக்கு அதை இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படுவதைப் போலவே இந்த ஆண்டும் சிறப்பு முகாம்களை நடத்தி பொதுமக்களுக்கு நிலவேம்பு இலவசமாக வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago