போக்குவரத்துத்துறை ஆணையரகத்தின் கீழ் செயல்படும் அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள ஆள் பற்றாக் குறையால் ஆட்டோ, ஆம்னி பஸ் சோதனை பணிகள் மந்தமாக நடக்கின்றன. மேலும், ஓட்டுநர் உரிமம் வழங்குதல், உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளும் பாதிக்கப் பட்டுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 63 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓக்கள்) உள்ளன. இது தவிர 60-க்கும் மேற்பட்ட யூனிட் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறு கின்றனர். வாகனங்கள் பதிவு எண் வழங்குதல், ஆட்டோ உரிமையாளர் களின் பெயர் மாற்றம், உரிமம் புதுப்பித்தல் உட்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன. மேலும், பள்ளி வாகனங்கள், ஆம்னி பஸ்களை ஆய்வு செய்தல், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்களில் சோத னையும் நடத்தப்பட்டு வருகிறது.
ஆள் பற்றாக்குறையால் தற் போது இந்த பணிகள் பாதிக்கப் பட்டுள்ளன. போக்குவரத்துத் துறை ஆணையரகத்தில் கடந்த நவம்பர் மாத நிலவரப்படி சுமார் 900 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதாவது, போக்குவரத்து உதவியாளர் பிரிவில் 154, இளநிலை உதவியாளர் பிரிவில் 138, தட்டச்சர் பிரிவில் 79, பதிவு எழுத்தர் 42, அலுவலக உதவியாளர்கள் 138, வாகன ஆய்வாளர் முதல்நிலையில் 49, வாகன ஆய்வாளர் இரண்டாம் நிலை 65, கண்காணிப்பாளர் 63, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் 7 ஆகியவை காலிப்பணிடங்களாக உள்ளன.
இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நடக்கும் வழக்க மான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. யூனிட் அலுவலகங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களாக தரம் உயர்த்தப்படுகின்றன. ஆனால், அதற்கான முழுமையாக ஆட்கள் நிரப்பப்படுவதில்லை.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை ஆணையரக அதிகாரிகள் கூறும்போது, “முன்பெல்லாம் உரிமம் வழங்குவது, வாகனப் பதிவு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளே அதிகமாக இருக்கும். தற்போது வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவற்றின் மீதான சோதனைகளையும் அதிகரிக்க வேண்டியுள்ளது. பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சோதனைப் பணிகள் அதிகமாக நடத்த வேண்டியுள்ளது. எனவே, பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளோம். அதன்படி, அரசு படிப்படியாக காலிப்பணியிடங்களை நிரப்பும்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago