வாழப் பிடிக்கவில்லை என்று நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி விட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி(24). ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார். செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவர் தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார். அதில், “எனக்கு வாழப் பிடிக்கவில்லை. எனவே தற்கொலை செய்யப்போகிறேன்” என்று கூறப்பட்டிருந்தது. இதைப் பார்த்த நண்பர்கள் சில நிமிடங்களில் ராமமூர்த்தியின் வீட்டுக்கு வந்தனர். ஆனால் அதற்குள் அவர் தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து வில்லிவாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போன் பண்ணுங்க..
உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினைகள் மட்டுமே தற்கொலைக்கு முதல் காரணம். வேலையுடன் கூடிய வாழ்க்கை கல்வியையும், சின்ன சின்ன பிரச்சினைகளை சமாளிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். தோல்வி, சகிப்பு தன்மையை இவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தொழிலை தாண்டி மனம் விட்டு பேசும் வகையில் நல்ல நண்பர்களையும், உறவுகளையும் ஏற்படுத்திக் கொள்வது நல்லது.
தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் 044-24640050 என்ற சிநேகா தொண்டு நிறுவன எண்ணிற்கு தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் பேசலாம். இது முற்றிலும் இலவச சேவை. பேசுபவரின் பெயர் விவரங்களைகூட தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. அவரின் ரகசியமும் காக்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
15 hours ago