‘தேர்தலை தவறாக அணுகுபவர்களுக்கும், பணம் பட்டுவாடா செய்பவர்களுக்கும்தான் இரவு 10 மணிக்கு மேல் நடக்கும் பிரச்சாரம் பயனுள்ளதாக இருக்கும்’ என்று நாகர்கோவிலில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பா.ஜ.க. மாநிலத் தலைவரும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை திங்கள்கிழமை வெளியிடப்படும். தமிழகத்துக்கு என தனி தேர்தல் அறிக்கை தயாரிக்கவில்லை. எனினும் ஒவ்வொரு தொகுதிக்கும் ஏற்பதனித்தனியே தேர்தல் அறிக்கைதயார் செய்யப்படும்.
தேர்தல் பிரச்சாரத்துக்காக மோடி தமிழகம் வரவுள்ளார். அதற்கான இடம், தேதி பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்களும் தமிழகம் வருகின்றனர்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க.வின் வெற்றி உறுதி. மற்ற கட்சிகள் 2-ம் இடத்தை பிடிக்க போட்டி போடுகின்றன. இரவு 10 மணிக்கு மேல் வீடு, வீடாகவாக்கு சேகரிக்கலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை தவறாக அணுகுபவர்களுக்கும், பணம் பட்டுவாடா செய்பவர்களுக்கும்தான் இரவு 10 மணிக்கு மேல் நடக்கும் பிரச்சாரம் பயனுள்ளதாக இருக்கும். இரவு நேரங்களில் தனித் தனியாகவும் குழுவாகவும் சென்று வாக்கு சேகரிக்க அனுமதிக் ககூடாது. இப்போதே பணப்பட்டுவாடா பல இடங்களில் ஆரம்பமாகியுள்ளது. பணப்பட்டுவாடா செய்பவர்களை கைது செய்ய வேண்டும். அவர்களை ஜாமீனிலும் விடக்கூடாது என்றார் அவர்.
பாஜகவின் தேர்தல் அறிக்கை திங்கள்கிழமை வெளியிடப்படும். தமிழகத்துக்கு என தனி தேர்தல் அறிக்கை தயாரிக்கவில்லை. எனினும் ஒவ்வொரு தொகுதிக்கும் ஏற்ப தனித்தனியே தேர்தல் அறிக்கைதயார் செய்யப்படும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago