பிரசவ சிகிச்சை மரணங்கள் வேதனை அளிக்கிறது: சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கம்

By செய்திப்பிரிவு

உதகை அரசு மகப்பேறு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட மேலும் ஒரு பெண் நேற்று உயிரிழந்தார். டிச. 23 முதல் 29-ம் தேதிவரை பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயந்தி, அமுதா, சரஸ்வதி ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.

இதையடுத்து மேல் சிகிச்சைக் காக கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ராதிகா நேற்று முன்தினமும், ரேவதி நேற்றும் உயிரிழந்தனர்.

மாநில சுகாதாரப் பணிகள் திட்ட இயக்குநர் சண்முகம், சுகாதாரப் பணிகள் இயக்குநர் சந்திரநாதன் ஆகியோர், கடந்த இரு நாட்களாக உதகை அரசு மருத்துவமனை மற்றும் மகப்பேறு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உதகை மகப்பேறு மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்டு, பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்களிடம் சிகிச்சை முறைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாளொன் றுக்கு 5 லட்சம் வெளி நோயாளி களும், 80 ஆயிரம் உள் நோயாளி களும் சிகிச்சை பெறுகின்றனர். 2,000 பிரசவங்களும் நடக்கின்றன. மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும் ‘சிமாங்’ என்ற 105 தாய்-சேய் மையங்கள் செயல்படுகின்றன. நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் செயல்படும் இந்த ‘சிமாங்’ மையங்களின் செயல்பாடுகளை மத்திய அரசு பாராட்டியுள்ளது.

உதகை மகப்பேறு மருத்துவ மனையில் லிப்ட் வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்க, ரூ.45 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.21 லட்சம் மதிப்பில் செயற்கை சுவாசக் கருவிகள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. காலியாக உள்ள, இரு மகப்பேறு மருத்துவர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.

பிரசவ சிகிச்சையின்போது ஏற்பட்டுள்ள மரணங்கள் வேதனை அளிக்கிறது. சிகிச்சை குறைபாடு, மருந்துகளின் தரத்தால் மரணங்கள் நிகழவில்லை. மருத்துவர்கள் சகஜ மனநிலைக்கு திரும்பிய வுடன், உதகை மகப்பேறு மருத்துவ மனையிலேயே சிசேரியன் செய்யப்படும். குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்