4 ஆயிரம் பழங்குடியினர் வாழ்வில் ஒளியேற்றிய ‘கீ ஸ்டோன்’ : சமூக சேவையில் 20 ஆண்டுகள் தொடர் முயற்சி

By குள.சண்முகசுந்தரம்

பழங்குடியினருக்காக ஒரு வானொலி.. அவர்களுக்காக ஒரு பத்திரிகை.. கடந்த 20 வருடங்களில் இதையெல்லாம் சாத்தியமாக்கி இருக்கிறார்கள் வெளி மாநிலத்திலிருந்து கோத்தகிரிக்கு சமூக சேவை செய்ய வந்த மூவர்.

லக்னோவை சேர்ந்த சிநேகலதா, மேத்யூ ஜான், கொல்கத்தாவை சேர்ந்த பிரதிம் ராய் இவர்கள் மூவரும் 20 வருடங்களுக்கு முன்பு, கல்லூரி படிப்பை முடித்துவிட்டு டெல்லியில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் வேலை செய்தார்கள். தங்களது சேவையை பழங்குடியின மக்களுக்காக இன்னும் கொஞ்சம் விசாலமாக செய்ய வேண்டும் என்பதற்காக மூவரும் 1993-ல் தமிழகம் வந்தார்கள்.

இங்கு, பழங்குடியின மக்கள் வசிக்கும் மலைப்பிரதேசங்களை எல்லாம் சுற்றிப் பார்த்தவர்கள், இறுதியாக வந்தது நீலகிரி மாவட்டம் கோத்தகிரி. இங்கே 25 வகையான பழங்குடியின குழுக்கள் இருக்கிறார்கள். காடுகளில் தேன் எடுத்தல், கடுக்காய், நெல்லிக்காய், சீயக்காய் பறித்தல் இதுதான் இவர்களின் வாழ்வியல் ஆதாரம். ஆனால், இவற்றையெல்லாம் முறையாக விற்கத் தெரியாமல் இடைத்தரகர்களிடம் ஏமாந்து கொண்டிருந்தார்கள்.

கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு அத்தனையிலும் பின் தங்கிக் கிடந்த அந்த மக்களில் 4 ஆயிரம் குடும்பங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து வந்த பெருமை இந்த மூவரையும் சேரும். அது எப்படி சாத்தியமானது? சிநேகலதா பேசுகிறார்:

“நீலகிரி பழங்குடியினரில் நிறையப் பேர் தேன் எடுக்கிறார்கள். சுற்றுச்சூழல் மாசுபடாத இடத்தில்தான் தேனீக்கள் இருக்கும். இந்த மக்களை முன்னேற்றுவதற்காக ‘கீ ஸ்டோன்’ என்ற அமைப்பை தொடங்கினோம். காடுகளிலிருந்து பழங்குடியினர் கொண்டுவரும் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்காக 6 இடங்களில் மதிப்புக் கூட்டு மையங்களை தொடங்கி வர்த்தகத்துக்கும் வழி செய்தோம்.

ஒதுங்கி இருந்தாலும் பழங்குடியின மக்களிடம் குடிப்பழக்கம் இருக்கிறது. அதை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு கூட்டங்களையும் ஆங்காங்கே நடத்த வேண்டி இருக்கிறது. 12-ம் வகுப்புவரை பழங்குடியின குழந்தைகள் படிப்பதற்கு அரசு உதவி செய்கிறது அதற்கு மேல் படிப்பவர்களுக்கு ‘கீ ஸ்டோன்’ உதவி செய்கிறது. கோத்தகிரியைச் சுற்றியுள்ள எங்களின் பசுமை அங்காடிகளில் பழங்குடியினரின் தயாரிப்புகளை வாங்கி வைத்து வியாபாரம் செய்கிறோம். அதில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியையும் அந்த மக்களின் நலனுக்காகவே செலவிடுகிறோம்.

பழங்குடியின பெண்களுக்கு சுயவேலை வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுக்கிறோம். அந்த மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாங்கள் ஆரம்பித்த சமுதாய வானொலியை பழங்குடியின மக்களே இப்போது நடத்துகிறார்கள். அவர்களுக்கான அரசின் நலத் திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து சமுதாய ரேடியோவில் அடிக்கடி விவாதங்கள் நடக்கும்.

இதேபோல் பத்திரிகை ஒன்றையும் அவர்களுக்காக ஆரம்பித்தோம். அதனுடைய செய்தியாளர்கள் உள்ளிட்ட அத்தனை பேருமே பழங்குடியின இளைஞர்கள்தான். தமிழில் வெளிவரும் அந்தப் பத்திரிகையில், பழங்குடியினரின் சுகாதாரம், கல்வி, காடுவழி பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு இவைகளைப் பற்றிய விழிப்புணர்வு செய்திகளை வெளியிடுகிறோம்’’. கொஞ்சும் தமிழில் அழகாய் சொன்னார் சிநேகலதா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்