பூரண மதுவிலக்கு கோரி டிச.23 முதல் ஜோதி ஓட்டம்

தேசிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் காந்தியவாதி சசி பெருமாள் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

'மக்களுக்கு கேடு விளை விக்கும் மதுவை விரட்டும் நோக்கத்துடன், கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன் டிசம்பர் 23-ம் தேதியும், தூத்துக்குடி, நீலகிரியில் இருந்து 24-ம் தேதியும் ஜோதி ஓட்டம் தொடங்குகிறது.

'மதுவில்லா இந்தியா' என்ற கோஷத்துடன் தீப ஒளிச்சுடர் ஏந்தி 32 மாவட்டங்களை, 3 வழிப் பாதையாக கடந்து டிசம்பர் 29-ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை மெரீனா காந்தி சிலை அருகே சங்கமிக்கிறோம். ஜோதி ஓட்டத் தில் அவினாசியை சேர்ந்த `தாகம்' மாணவர்கள் சமூக நல அமைப்பு எங்களுடன் கைகோத்துள்ளது.

கன்னியாகுமரியில் இந்நிகழ்வை காந்தி பேரவை நிறுவனர் குமரி அனந்தன் தொடங்கி வைக்கிறார். கன்னியா குமரி - சென்னை வழித்தடத்துக்கு ஷகீலா ராஜ்குமார் தலைமை வகிக்கிறார். நீலகிரி - சென்னை வழித்தடத்துக்கு அவினாசி அத் திக்கடவு திட்ட போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பொன்னுக் குட்டியும், தூத்துக்குடி - சென்னை வழித்தடத்துக்கு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையனும் தலைமை வகிக்கின்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்க கேரள முதல்வர் உம்மன் சாண்டி, புதுச் சேரி முதல்வர் ரெங்கசாமி ஆகி யோருக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. நிறைவு நாள் விழாவில் வைகோ பங்கேற்கிறார் என்றார். சமூக சேவகர் ஆர்.எஸ்.ராஜன் உடன் இருந்தார்.









VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்