கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டை புதுப்பிக்க இன்று சிறப்பு முகாம்

கையால் எழுதப்பட்ட பாஸ் போர்ட்டை புதுப்பிக்க இன்று சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து, மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கையால் எழுதப்பட்ட பாஸ் போர்ட்டை வரும் 2015, நவ.24-ம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளும்படி, சர்வதேச விமானப் போக்குவரத்துக்கழகம் காலக்கெடு விதித்துள்ளது.

இக்காலக்கெடு முடிந்த பிறகு, இத்தகைய பாஸ்போர்ட்டை வைத் திருப்பவர்களுக்கு வெளிநாடு செல்ல விசா வழங்கப்பட மாட்டாது. எனவே, கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் உடனடியாக புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

அதேபோல், 6 மாதங்களுக்குள் காலாவதியாகக் கூடிய பாஸ் போர்ட் வைத்திருந்தால், அவர் களும் உடனடியாக தங்க ளுடைய பாஸ்போர்ட்டை புதுப் பித்துக்கொள்ள வேண்டும்.

சில நாடுகள் 2 பக்கங்களுக்கு குறைவான பாஸ்போர்ட் வைத் திருப்பவர்களுக்கு விசா வழங்க மறுத்துவருகிறது.

எனவே, பாஸ்போர்ட் வைத்தி ருப்பவர்கள் தங்களுடைய பாஸ் போர்ட் புத்தகத்தில் குறிப்பிட்ட அளவு பக்கங்கள் உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதேபோல், அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் 64 பக்கங்களை கொண்ட ஜம்போ பாஸ்போர்ட்டை பெற்றுக் கொள்ளலாம்.

இப்புதிய பாஸ்போர்ட்டை பெறுவதற்காக சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் இன்று (27-ம் தேதி) சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE