பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த எஸ்.மோகன் என்ற வாசகர், ‘தி இந்து - உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு கூறியதாவது:
சென்னை பல்லாவரத்தில் இருந்து குன்றத்தூர் வரையிலான 7 கிலோ மீட்டர் நீள சாலை நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது குறுகிய சாலையாக இருப்பதால் காலை மற்றும் மாலை நேரங்க ளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதற்கிடையே, செம்பரம்பாக்கம் கூட்டுகுடிநீர் திட்டத்துக்காக இந்தச் சாலையின் பல இடங்களில் 6 அடிகள் வரை பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. குடிநீர் திட்டப் பணிகளும் மெத்தனமாக நடந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் போக்குவரத்துக்கு முற்றிலும் தகுதியற்ற சாலையாக இது மாறியுள்ளது. இந்த சாலையை 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “பல்லாவரம் குன்றத்தூர் இடையேயான சாலையை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் திட்டம் அரசிடம் உள்ளது. தற்போது, அங்கு கூட்டுகுடிநீர் திட்டத்துக்கான பணிகள் நடந்து வருவதால், அதற்கான பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. குடிநீர் திட்டப்பணிகள் முடிந்தவுடன் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகளை தொடங்கவுள்ளோம்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago