சிபிஎஸ்இ மேற்பார்வையின் கீழ் நெட் தேர்வு: புதுச்சேரியில் 4,500 பேர் எழுதினர்

பல்லைக்கழக மானியக் குழு நடத்தும் நெட் தேர்வை புதுச் சேரியில் 4,500 பேர் எழுதினர்.

பல்கலைக்‍கழக மானியக்‍ குழு நடத்தும், கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்‍கான நெட் (NET) தேசிய தகுதித் தேர்வு புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது.

வரலாறு, வணிகவியல், அறிவி யல், கணிதம் உள்ளிட்ட பாடங் களில் முதுகலைப் பட்டம் பெற்ற வர்கள், கல்லூரி உதவிப் பேராசிரி யர் பணியில் சேர்வதற்காகவும், ஆராய்ச்சி படிப்பில் சேருவதற்கும் யுஜிசி சார்பில் தேசிய தகுதித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தேர்வு புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது. பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, ஆச்சார்யா மேல்நிலைப்பள்ளி, ஆச்சார்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாத்திமா பள்ளி, இதயா மகளிர் கல்லூரி, போப்ஜான்பால் பள்ளி ஆகிய 7 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த தகுதி தேர்வில் 4,500 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வுக் குழு ஒருங்கிணைப்பாளர் மொகந்தி தேர்வை மேற்பார்வை யிட்டார். பல்கலைக்கழக மானியக் குழு மேற் பார்வையில் நடத்தப் பட்ட இந்த தேர்வு தற்போது முதல் முறையாக சிபிஎஸ்இ மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE