தொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தல்

சென்னை பல்லவன் இல்லத்தில் நடந்த தொழிற்சங்கங்களின் நிர்வாகி கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் பிரச்சினையை தீர்க்காமல், இந்த மாதம் எடுத்த விடுப்புகளை ஆப்சென்ட் போட்டு 50,000-க்கும் மேற்பட்ட தொழிலா ளர்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை சம்பளம் பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக தொழிலாளர்கள் தன்னிச்சையாக தமிழகம் முழுவதும் இன்று (நேற்று) வேலைநிறுத்தம் செய்யும் நிர்பந்தத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளர்கள் மீது ஆளும் கட்சியினர் அடியாட்களை அனுப்பி காவல்துறை துணையோடு தாக்குதல் நடத்தியுள்ளனர். பணிமனைக்குள் காவல்துறை புகுந்து தொழிலாளர்களை கைது செய்தது கண்டனத்துக்குரியது.

கைது செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும். மேலும், தொழிற்சங்கங்களை அழைத்துபேசி தொழிலாளர் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காணவேண்டும்.

அனுபவமற்றவர்களை கொண்டு பஸ்களை இயக்கி பயணிகளின் பாதுகாப்பை அரசு கேள்விக்குறியாக்கி உள்ளது. அரசின் இந்த நடவடிக் கையை வன்மையாக கண்டிக்கிறோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE