டிசம்பர் 30 நம்மாழ்வார் நினைவு தினம்
ராமநாதபுரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது எட்டிவயல் கிராமம். இந்த கிராமத்தை சுற்றி கருவேலம் மரங்கள் சூழ்ந்திருக்க அதன் நடுவே 54 ஏக்கர் பரப்பளவில் பசுமை தீவு போல காட்சி தரும் தரணி முருகேசணின் ஒருங்கிணைந்த இயற்கை விவசாயப் பண்ணையம் அமைந்துள்ளது.
இந்தப் பண்ணையத்தில் வாழ்நாள் முழுவதும் இயற்கையோடு இணைந்த விவசாயத்துக்காக வாழ்ந்த நம்மாழ்வாருக்கு நினைவு மண்டபத்தை கட்டி வருகிறார் விவசாயி தரணி முருகேசன்.
ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தளவில் தண்ணியில்லாத காடு, வறண்ட பூமி எனவே எப்பவும் விவசாயிங்களோட கணக்கு நட்டக் கணக்கு தான் சொல்லுவாங்க. ஆனால் விவசாயத்தை இயற்கையோடு ஒன்றிணைந்து செய்தால் எப்பவும் லாபக் கணக்குதான் என்பதை புரிஞ்சிக்கிட்டு விவசாயம், கால்நடை, மீன் வளர்ப்புனு எல்லாத்தையும் ஒருங்கிணைந்த பண்ணையமாகச் செய்து நல்ல வருமானம் கிடைத்தது. தனது பண்ணையத்தில் நம்மாழ்வாருக்கும், நம்மாழ்வார் போன்று இயற்கையை நேசிப்பவர்களுக்கும் ஏதேனும் செய்ய வேண்டும் என்று தோன்றவே நம்மாழ்வாருக்கு நினைவு மண்டபத்தை கட்டத் துவங்கிய கதையை நமது செய்தியாளரிடம் கூறினார் தரணி முருகேசன்.
எட்டிவயலில் உள்ள எனது பண்ணையத்தில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கடந்த 2012ம் ஆண்டில் `இனியெல்லாம் இயற்கையே' என்ற தலைப்பில் ஐயா நம்மாழ்வார் 400க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு களப்பயிற்சி அளித்தார். அப்போது தான் ஐயாவை முதன்முதலாக நேரில் சந்தித்தேன். அதற்கு முன்னர் அவர் எழுதிய புத்தகங்கள் எனக்கு வழிகாட்டியாக இருந்தது.
இயற்கை விவசாயப் பயிற்சியை லட்சக்கணக்கானோருக்கு அளித்த நம்மாழ்வாருக்கு அவரது மறைவுக்கு பின்னர் எனது பண்ணையத்தில் 4 செண்ட் பரப்பளவில் நினைவு மண்டபத்தை தற்போது கட்டிக் கொண்டிருக்கிறேன்.
முன்னதாக ஐயா நம்மாழ்வார் அவர்கள் வழிகாட்டிச் சென்ற இயற்கை வேளாண் செய்முறைப் பயிற்சி, களஆய்வு, நேரடிஅனுபவம், வேளாண் கல்விச் சுற்றுலா ஆகியவற்றை எனது பண்ணையத்தில் நடத்தி வருகிறோம்.
இயற்கை வேளாண் துறையில் அனுபவமிக்கவர்களைக் கொண்டு “இயற்கை வழி வேளாண்மை”யை சான்றிதழ் படிப்பாக அறிமுகப்படுத்தி நம்மாழ்வார் நினைவு அரங்கத்தில் அதனை நடத்த வேண்டும் என்பதுதான் எதிர்கால திட்டம், என்றார் தரணி முருகேசன்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago