ஆட்டோ மீட்டர் திட்டம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்ட சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்கச் செயலர் ஏ.எல்.பக்ருதீன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் ஆட்டோக்களில் கட்டாயம் மீட்டர் பொருத்த வேண்டும் என தமிழக அரசு 16.10.2014-ல் உத்தரவிட்டது. குறைந்தபட்ச கட்டணம் (1.8 கி.மீ) ரூ.25 என்றும், கூடுதல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் கட்டணம் ரூ.12 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மிகக் குறைவாகும்.

குறைந்தபட்சக் கட்டணம் ரூ.30 என்றும், கூடுதலாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.15 எனவும் கட்டணத்தை உயர்த்த வேண்டும். மேலும், 3 மாதத்துக்கு ஒரு முறை கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும். தமிழகத்தில் மீனவர் களுக்கு வழங்குவது போல், ஆட்டோக்களுக்கு மானிய விலையில் டீசல், காஸ் வழங்க வேண்டும்.

அனைத்து ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, புதிய கட்டணம் நிர்ணயம் செய்த பின், மீட்டர் பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்க தமிழக உள்துறைச் செயலர், போக்குவரத்து செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்