பாடபுத்தகத்தில் உதயசூரியன் படம் இடம்பெற்றுள்ளது தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்கேஜி பாடப் புத்தகத்தில் உதயசூரியன் படம் இடம் பெற்றிருப்பதாகவும் அதனை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கோரி புரட்சி சுரேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:
எல்கேஜி ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் 'S' என்ற ஆங்கில எழுத்தை குறிக்கும்இடத்தில் 'SUN' என எழுதப்பட்டு, சூரியன் கண்ணாடி அணிந்திருப்பதைப் போல படம் வரையப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர் ஒருவரின் படம் போல் உள்ளது.
அதேபோல் அதிகாலை நேர நிகழ்வுகளைச் சித்தரிக்கும் பக்கத்தில்உதயசூரியன் சின்னம் வரையப்பட்டுள்ளது. மழலைக் குழந்தைகள் மனதில்அரசியல் கருத்துகளைத் திணிக்கும் வகையில் அமைந்துள்ள இந்தப் படங்களை வரும் கல்வியாண்டுக்குள் பாடப் புத்தகத்தில் இருந்து அகற்றிட பள்ளிக் கல்வித் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதிஎம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வில் வியாழக்கிழமைவிசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடர்பாக வரும் 9-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதற்குமுன்பாக மனுதாரரின் கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில்கூறி, வழக்கின் விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago