இன்னும் ஓராண்டில் பெங்களூரில் 100 ஏக்கர் பரப்பளவில் வி.ஐ.டி. வளாகம் தொடங்கப்படும் என்று வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் அறிவித்தார்.
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் சென்னையில் நிருபர்களுக்கு வியாழக்கிழமை பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வி.ஐ.டி. நுழைவுத்தேர்வு
வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிப்பில் சேருவதற்கான அகில இந்திய அளவிலான ஆன்லைன் நுழைவுத்தேர்வு ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை 137 மையங்களில் நடைபெற உள்ளது. ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 790 மாணவ - மாணவிகள் தேர்வெழுத இருக் கிறார்கள்.
தேர்வு முடிவுகள் ஏப்ரல் 28-ம் தேதி வெளியிடப்படும். விரும்பும் பாடப்பிரிவு, கல்வி வளாகம் ஆகியவற்றை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு மே 19 முதல் 22-ம் தேதி வரை நடைபெறும். பி.டெக். படிப்பில் பாடப்பிரிவுகளில் வேலூர் வளாகத்தில் 3 ஆயிரம் இடங்களும், சென்னை வளாகத்தில் 1197 இடங்களும் (மொத்தம் 4,197) இடங்கள் உள்ளன.
பெங்களூரில் புதிய வளாகம்
வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு மாணவர்களும் படிக்கிறார்கள். வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். கடந்த 3 ஆண்டுகளாக ஆராய்ச் சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.
ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித் தொகையையும் வழங்கப்படுகிறது. இன்னும் ஓராண்டில் பெங்களூரில் 100 ஏக்கர் பரப்பளவில் புதிய வளாகத்தை தொடங்க முடிவுசெய்துள்ளோம். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு 2015 முதல் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இவ்வாறு விஸ்வநாதன் கூறினார்.
பேட்டியின்போது, வி.ஐ.டி. பல்கலைக்கழகத் துணைத்தலை வர் (நிர்வாகம்) சங்கர் விஸ்வநாதன், இயக்குநர் (யு.ஜி. அட்மிஷன்) கே.மணிவண்ணன், சென்னை வளாக இணை துணை வேந்தர் ஆனந்த் சாமுவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆண்டுக்கு ரூ.16 லட்சம் சம்பளத்தில் வேலை
ஜி.விஸ்வநாதன் மேலும் கூறியதாவது:- கேம்பஸ் இண்டர்வியூ தேர்வைப் பொருத்தமட்டில், இதுவரை 214 நிறுவனங்கள் தேர்வு நடத்தி 3,031 மாணவ-மாணவிகளை வேலைக்கு எடுத்துள்ளன. சராசரியாக ஆண்டுச் சம்பளம் ரூ.3 லட்சம் முதல் 4 லட்சம் வரையில் பணிநியமனம் கிடைத்துள்ளது. அதிகபட்சமாக ஒரு சிலருக்கு ரூ.16 லட்சம் சம்பளத்திலும் வேலை கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டு கேம்பஸ் இண்டர்வியூ தேர்வில் மூலம் அதிகபட்சமாக ரூ.14 லட்சம் சம்பளத்தில் மாணவர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
பொதுவாக கேம்பஸ் இண்டர்வியூ தேர்வில் மாணவர்களை நிறுவனங்கள் தேர்வு செய்யும். ஆனால். எங்கள் பல் கலைக்கழகத்தில் 1,094 மாணவர்களுக்கு இரண்டு நிறுவனங்களிலும், 612 பேருக்கு 3 நிறுவனங்களிலும், 174 பேருக்கு 4 நிறுவனங்களிலும் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் கிடைத்தது. இதிலிருந்து மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான வேலையையும் பிடித்தமான நிறுவனத்தையும் தேர்வுசெய்வர் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago