அனைத்து நீதிமன்றங்களிலும் டிச.6-ல் லோக் அதாலத்: 14 லட்சம் வழக்குகளை முடித்து, ரூ.1,000 கோடி பணம் வழங்க திட்டம்

By டி.செல்வகுமார்

தமிழகம் முழுவதும் டிசம்பர் 6-ம் தேதி அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெறவுள்ள தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (லோக்-அதாலத்) 14 லட்சம் வழக்குகளுக்கு மேல் தீர்வு காணப்பட்டு, சுமார் ரூ.1,000 கோடியை வழக்கு தொடர்புடை யவர்களுக்கு வழங்க திட்டமிடப் பட்டுள்ளது.

லோக்-அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தை நாடுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிக ரிக்கிறது. சமரசம் மூலம் விரைவான தீர்வு, மேல்முறையீடு கிடையாது ஆகியவையே இதற்கு காரணம்.

மக்கள் நீதிமன்றம் மூலம் சமரச தீர்வு காண விரும்புவோர், ஒரு வெள்ளை காகிதத்தில் தங்களது பிரச்சினை குறித்து விளக்க மாக எழுதி அந்தந்தப் பகுதி நீதிமன்றத்தில் உள்ள சட்டப் பணிகள் குழுவிடம் மனுவாகக் கொடுக்கலாம்.

பின்னர், சம்பந்தப்பட்டவர் களுக்கு தகவல் தெரிவித்து சமரச தீர்வு நடவடிக்கை மேற்கொள் ளப்படும். மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட கீழமை நீதிமன்றங்களில் மாதத்தில் ஒருநாளும், சென்னை மற்றும் மதுரையில் உள்ள உயர் நீதி மன்றங்களில் 6 மாதத்துக்கு ஒருமுறையும் மக்கள் நீதிமன்றம் நடைபெறும். இந்த லோக்-அதாலத்தில் தொழிலாளர் பிரச்சி னைகள், குடும்ப சட்ட பிரச்சினை கள், இழப்பீடு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.

கூலி, போனஸ், தற்காலிக தினக் கூலிகள், தொகுப்பு ஊதியதாரர் கள், ஊழியர்களுக்கான அரசு காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, பரஸ்பர ஒப்புதலோடு பதியப் பெற்ற விவாகரத்து வழக்கு, சிறுவர் பாதுகாப்பு, தத்தெடுப்பு மற்றும் ஜீவனாம்ச வழக்குகள், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ திருமண சட்டம், வாகன விபத்து மூலம் நிரந்தர ஊனம், மரணம், இதர காயங்களுக்கான நஷ்ட ஈடு கோரிக்கைகள், ரயில்வே விபத்து மற்றும் இதர ரயில்வே இழப்பீடு வழக்குகள், வணிகச் சட்டம் மற்றும் அதைச் சார்ந்த பரிமாற்றங்கள், நில ஆர்ஜிதம், மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டண வழக்குகள் (திருட்டு வழக்குகள் நீங்கலாக), விற்பனை வரி, வருமான வரி, மறைமுக வரி, சொத்து வரி தொடர்பான பிரச்சினைகள், உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் மேல்முறையீடு வழக்குகள், வாராக்கடன் வசூல் தீர்ப்பாய வழக்குகள், சட்டத்தால் தீர்க்கப் படக் கூடிய எந்தவொரு பிரச்சினை யும் நீதிமன்றத்துக்கு செல்லா மலேயே முடிக்கக் கூடிய பிரச்சி னைகள் அனைத்துக்கும் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் விரைவாக தீர்வு காணமுடியும்.

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் தேசிய மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு அதிக வழக்குகளில் தீர்வு கண்டு முதலிடம் பிடித் தது. 15 லட்சத்து 8 ஆயிரத்து 767 வழக்குகள் முடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.939 கோடியே 40 லட்சத்து 45 ஆயிரத்து 686 வழங்கப்பட்டது.

அதுபோல டிசம்பர் மாதம் 6-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. அன்று தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களில் நடை பெறவுள்ள தேசிய மக்கள் நீதி மன்றத்தில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை முடித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு சுமார் ரூ.1,000 கோடி பணம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் ஆர்.எம்.டி. டீக்கா ராமன் தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்