தேர்தல் விதிகளை மீறியதாக அதிமுக, திமுக கட்சியினர் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அதிமுக, திமுக கட்சியினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சூளைமேடு பத்மநாபா நகரில் பெரியார் பாதை, அண்ணா பாதை, தமிழர் வீதி ஆகிய இடங்களில் அதிமுக, திமுக கட்சியினர் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள், கொடி தோரணங்கள் கட்டியுள்ளதாக தேர்தல் அதிகாரி கீதா, சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில் இரு கட்சியினர் மீதும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வெள்ளிக்கிழமை காலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கோவிந்தராஜன் தலைமையில் வாகன சோதனை நடந்தது.

அப்போது அந்த வழியாக வந்த அபிராமபுரத்தை சேர்ந்த தண்டபாணி என்பவரின் காரில் ரூ.2 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஒரு நிறுவனம் வைத்திருப்பதாகவும், தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க பணத்தை எடுத்து செல்வதாகவும் அவர் கூறினார். ஆனால் அதற்கான ஆதாரம் அவரிடம் இல்லை. எனவே, ரூ.2 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்