வங்கக் கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி: கடலோர மாவட்டங்களில் மழை தொடரும்

By செய்திப்பிரிவு

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் நேற்று கூறியதாவது:

தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது. இது வடக்கு இலங்கை மற்றும் தமிழகத்தை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் தற்போது நிலை கொண்டுள்ளது.

இதனால், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் வேதாரண்யத்தில் 7 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை, திருவாரூர் மாவட்டம் கொடவாசலில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவாக அதே இடத்தில் நீடிப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும். வட கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங் களிலும், உள்மாவட் டங்கள் மற்றும்டெல்டா மாவட்டங் களில் சில இடங்களிலும் மழை பெய்யக் கூடும்.

இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவாக இருப்பதால் இது தாழ்வு மண்டலமாகவும் பின்பு புயலாகவும் மாற வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE