சென்னையில் 5 சுரங்கப் பாதைகளை அமைக்கும் தமிழக அரசின் திட்டத்தை பல்வேறு காரணங்களுக்காக தொடங்க முடியாமல் திணறுகிறது சென்னை மாநகராட்சி.
கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி எதிரில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் அருகில், அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலை, காமராஜ் சாலை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில், வடபழனி பேருந்து நிலையம் அருகில் பாதசாரிகளுக்காக சுரங்கப்பாதை அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. சுரங்கப் பாதைகளை அமைக்க பல்வேறு தரப்பினர் பல்வேறு காரணங்களுக்காக எதிர்ப்பு தெரிவிப்பதால், இதனை தொடங்க முடியாமல் குழப்பத்தில் இருக்கிறது சென்னை மாநகராட்சி.
வடபழனி பேருந்து நிலையம் அருகில் மோனோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதால், அந்த திட்டத்துக்கு இடையூறு இல்லை என்று அனுமதி பெற்ற பின்னரே, சுரங்கப்பாதை பற்றி யோசிக்க முடியும். அயனாவரத்தில் சுரங்கப்பாதை இல்லாமலேயே போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியும் என்று போக்குவரத்து காவல் துறையினர் கூறுகின்றனர். புரசைவாக்கத்தில் ஒரு வழிப்பாதையாக இருப்பதால், சுரங்கப்பாதை வேறு இடத்தில் அமைக்குமாறு போக்குவரத்து காவல் துறையினரும், பொது மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். மீனாட்சி கல்லூரி அருகே சுரங்கப்பாதைக்கு பதிலாக நடைமேம்பாலம் அமைப்பது மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவிக் கப்பட்டுள்ளது. காமராஜ் சாலையில் சுரங்கப்பாதை அமைப் பதற்கு பாதுகாப்பு காரணங்களுக் காகவும், சுதந்திர தின பேரணி நடத்துவதற்கு இடையூறாக இருக்கும் என்பதற்காகவும் காவல் துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்துக்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, மக்களின் கருத்துகளை கவனத்தில் கொண்டு சுரங்கப்பாதை வடிவமைப்பை தயாரிக் கும் பணி இன்ஃப்ரா சப்போர்ட் இன்ஜினீயரிங் என்ற ஆலோசக நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. ஆனால், இத்திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால், இறுதி முடிவு எட்டப் படவில்லை.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “வடிவமைப்பை பொறுத்தவரை இந்த சுரங்கப் பாதைகள் அனைத்துமே சாத்திய மாகக் கூடியவைதான். ஆனால், இத்திட்டத்தில் பல்வேறு துறையினர் ஈடுபட்டிருப்பதால் காவல்துறை, போக்குவரத்து காவல்துறை ஆகிய துறைகளை உள்ளடக்கிய உயர் மட்டக் குழுதான் இது குறித்து இறுதி முடிவை எடுக்க முடியும். இத்திட்டம் குறித்த இடைக்கால அறிக்கையை தயார் செய்து விரைவில் அரசுக்கு அனுப்புவோம்” என்றார்.
இந்த சுரங்கப் பாதைகளை அமைக்க கோடம்பாக்கத்தில் 30.8 சதுர மீட்டர், ஆற்காடு சாலையில் 21.5 ச.மீ., டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 76.4 ச.மீ., கொன்னூர் நெடுஞ்சாலையில் 41.4 ச.மீ. நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. புரசையில் போதிய இடம் இருக்கிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago