செட்டிநாடு சிலிக்கான் நிறுவன தலைவர் பதவியிலிருந்து எம்.ஏ.எம்.ராமசாமி நீக்கம்

By குள.சண்முகசுந்தரம்

செட்டிநாடு சிலிக்கான் நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து எம்.ஏ.எம். ராமசாமியை நீக்க முயற்சி நடப்பதாக ’தி இந்து’வில் செய்தி வெளியாகி இருந்தது. அதன்படியே, எம்.ஏ.எம்.ராமசாமியை நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறை வேற்றி இருக்கிறார் சுவீகார புதல்வர் முத்தையா.

ஜப்பான் நிறுவனத்தின் கூட்டு இயக்கத்தில் செயல்படும் செட்டி நாடு சிலிக்கான் நிறுவனத்தின் தலை வராக எம்.ஏ.எம்.ராமசாமி இருக்கிறார். இதன் பெரும்பகுதி பங்குகள் தற்போது முத்தையா வசம் இருக்கின்றன.

இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி கூடிய இந்த நிறுவனத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் தலைவர் பதவியி லிருந்து எம்.ஏ.எம். நீக்கப்படுவ தாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.

ஆனால், இந்த தீர்மானத்தை செயல் படுத்த தடைவிதித் திருக்கும் கம்பெனிகள் சட்ட வாரியம், தீர்மானத்தை செயல் படுத்துவதற்கு முன்பாக எம்.ஏ.எம். மற்றும் முத்தையா தரப்பினர் விளக்க மனு தாக்கல் செய்யவேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறது. இதனால் தொடர்ந்து செட்டிநாடு சிலிக்கான் நிறுவனத் தலைவராக நீடிக்கிறார் எம்.ஏ.எம்.

இதனிடையே, காந்திநகர் கல்வி அறக்கட்டளையின்கீழ் செயல் படும் ஹரி  வித்யாலயம் பள்ளியை முழுமையாக தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் முடுக்கி விட்டி ருக்கிறார் எம்.ஏ.எம்.

இது தொடர்பாக அரண் மனைக்கு நெருக்கமானவர்கள் கூறுகை யில், ’’காந்தி நகர் கல்வி அறக்கட்டளையின் தலைவராக இருக்கிறார் எம்.ஏ.எம். அந்த அறக்கட்டளையின்கீழ் செயல்படும் ஹரி  வித்யாலயம் பள்ளியில் எல்.கே.ஜி. அட்மிஷனுக்கு லட்சக் கணக்கில் நன்கொடைகள் வசூலிக்கப் படுவதாக வந்த புகார் களை அடுத்து, நன்கொடை வசூலிக்கக் கூடாது என பள்ளிச் செயலருக்கு கடிதம் எழுதினார்.

பள்ளியில் மாணவர் சேர்க் கைக்காக புதிதாக மூன்று நபர் சப் கமிட்டி ஒன்றை நியமித்தார் எம்.ஏ.எம். ஆனால், இந்தக் கமிட்டியை பள்ளிக்குள் உள்ளே விட மறுக்கிறார்கள். பள்ளியின் செயலாளராக முத்தையாவின் மனைவி கீதா இருக்கிறார்.

கீதா சிங்கப்பூரிலேயே இருப் பதைக் காரணம்காட்டி அவரைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்குவ தற்கான முயற்சியில் எம்.ஏ.எம். இறங் கினார். இதைத் தெரிந்து கொண்டு மனைவியை நீக்க தடை வாங்கிவிட்டார் முத்தையா.

அப்படியும் அசராத எம்.ஏ.எம்., பள்ளியின் முன்னாள் முதல்வரை கூடுதல் செயலாளராக நியமித்த துடன் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைகள் அனைத் தையும் ஆய்வு செய்வோம் என பள்ளியின் தகவல் பலகையில் அறிவிப்பும் ஒட்ட வைத்திருக்கிறார்’’ என்று தெரி வித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்