நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி வரும் 5-ம் தேதி கோவையில் தனது முதல்கட்ட பிரச்சாரத்தை தொடங்குகிறார்
இதுதொடர்பாக திமுக தலைமை அலுவலகம் புதன் கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
திமுக தலைவர் கருணாநிதி, ஏப்ரல் 5-ம் தேதி காலை விமானம் மூலம் கோவை செல்கிறார். அன் றிரவு 7 மணிக்கு கோவை வ.உ.சி. மைதானத்தில் நடக்கும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
மறுநாள் (6-ம் தேதி) பிற்பகல் 3.15 மணிக்கு கோவை விமான நிலையம் அருகிலிருந்து புறப்பட்டு தெக்களூர், அவினாசி ஆகிய இடங்களில் வேனில் இருந்தபடியே பிரச்சாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு திருப்பூர் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் பெருமாநல்லூர், பெருந்துறை ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டுவிட்டு, இரவு 7.45 மணிக்கு ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
7-ம் தேதி மாலை 5 மணியிலிருந்து பள்ளிப்பாளையம், சங்ககிரி ஆகிய இடங்களில் வேனில் இருந்தபடி பிரச்சாரம் செய்கிறார். அன்றிரவு 7.25 மணிக்கு சேலம் போஸ் மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். கூட்டம் முடிந்ததும் இரவு ரயில் மூலம் சென்னை திரும்புகிறார். இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
16 hours ago