அரசு அலுவலகங்களில் முன்னாள் முதல்வர் படம் இருக்கலாம்: உயர் நீதிமன்றத்தில் அரசாணை தாக்கல்

தமிழக அரசு அலுவலகங்களில் முன்னாள் முதல்வர்களின் படங்கள் இருக்கலாம் என்று 2006-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜெயலலிதா படம் இருப்பது தவறில்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.

மதுரை வழக்கறிஞர் கருணாநிதி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தனது பதவியை இழந்தார். இதை யடுத்து, ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். ஆனால், தமிழக அரசு அலுவலகங்களில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் படம் வைக் கப்படாமலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் இன்னும் அகற்றப்படாமலும் உள்ளன.

அரசு அலுவலங்கள், அரசின் திட்டங்களில் உள்ள ஜெயலலிதா வின் பெயர் மற்றும் படங்களை அகற்றவும், ஓ.பன்னீர்செல்வத்தின் படத்தை வைக்கவும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இம் மனு நீதிபதிகள் தனபாலன், வேலுமணி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘அரசு அலுவலகங்களில் முதல்வரின் படம் வைப்பது தொடர்பாக உத்தரவு ஏதேனும் உள்ளதா’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, ‘தமிழக அரசு அலுவலகங்களில் வ.உ.சி, காயிதே மில்லத், இந்திரா காந்தி, முன்னாள் முதல்வர்கள், பதவியில் உள்ள முதல்வர்கள் படங்களை வைக்க லாம் என்று 2006, ஜூன் 4-ல் அரசாணை (எண்: 457) பிறப்பிக்கப் பட்டுள்ளது.

அந்த அரசாணைப்படி தமிழக அரசு அலுவலகங்களில் முன்னாள் முதல்வர் படம் இருப்பதில் தவறில்லை. மனுதாரர் திமுக வழக்க றிஞர் அணியில் உள்ளதால் இந்த மனு அரசியல் உள்நோக்கம் கொண் டது என்று சொல்லி, அந்த அர சாணை நகலை தாக்கல் செய்தார்.

இதையடுத்து, மனுதாரர் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார், ‘அரசு அலுவலகங்களில் முன்னாள் முதல்வர்கள் படங்களை வைக்க லாம் என்ற அரசாணையை அட்வ கேட் ஜெனரல் கடைசி நேரத்தில் தாக்கல் செய்துள்ளார். அதற்கு, பதிலளிக்க அவகாசம் தர வேண்டும்’ என்றார். இதையடுத்து, இந்த மனு மீதான தீர்ப்பு வழங்குவதற்காக டிச.22-ம் தேதிக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்