தமிழ்நாடு அரசில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளமும், ஏ மற்றும் பி உள்ளிட்ட இதர பிரிவு பணியாளர்களுக்கு ரூ.5,000 சிறப்பு போனஸாகவும் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த சங்கத்தின் மாநில தலைவர் கு.பால்பாண்டியன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பார்வையில் கண்ட அரசாணையின்படி சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரமும், ஏ மற்றும் பி பிரிவுப் பணியாளர்கள், சிறப்பு கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், கிராம உதவியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் குறைந்தபட்சம் 240 நாட்களுக்கு குறையாமல் பணியாற்றி வரும் தினக்கூலிப் பணியாளர்கள் ஆகியோருக்கு ஆயிரம் ரூபாயும் சிறப்பு போனஸாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட இன்றைய சூழ்நிலையை கவனத்தில் கொண்டு இந்த ஆண்டு அனைத்து சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி ஒரு மாத ஊதியம் போனஸாகவும், ஏ மற்றும் பி பிரிவு பணியாளர்கள் உள்ளிட்ட இதர பிரிவு பணியாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் சிறப்பு போனஸாகவும் வழங்கப்பட வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கைவிடுத்து வருகிறோம். எனவே, இந்த ஆண்டு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago