ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில் சமரசம்- பாஜகவை சந்தேகிப்பது திமுகவின் பலவீனத்தை காட்டுகிறது: தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் சிறப்புப் பேட்டி

By எம்.மணிகண்டன்

ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில் மத்திய அரசு உதவியதாக கருணாநிதி சந்தேகிப்பது, திமுக பலவீனமடைந்ததின் வெளிப்பாடாகத்தான் இருக்கிறது என பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் கூறினார்.

தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பாஜக மற்றும் சென்டர் ஃபார் ஏசியன் ஸ்டடீஸ் சார்பில் சென்னையில் சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடத்தப்பட்டது இதில் பங்கேற்ற பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ், ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

மீனவர் பிரச்சினையில் இரு நாட்டு அரசுகள் பேசுவதை விடுத்து, இப்படி கருத்தரங்கு நடத்துவது என்ன பலனை தரப்போகிறது?

கூட்டணிக்குள் உள்ள கட்சிகளே மீனவர் மற்றும் இலங்கை பிரச்சினையில் எங்களை விமர்சிக்க ஆரம்பித் துள்ளன. இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதில் பாஜகவுக்கு உள்ள அக்கறையை காட்ட வேண்டிய அவசியம் உள்ளது. மீனவர் பிரச்சினையின் உண்மை நிலைமை அறிய இந்த கருத்தரங்கு பெரியளவில் உதவும்.

இலங்கையில் நடந்த ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டது பற்றி?

அரசியல் கட்சிகளுக்கான அந்த மாநாட்டில் இந்தியா சார்பாக தொழில் வர்த்தகம், பாதுகாப்பு குறித்து பேசினேன். அதேவேளையில், இலங்கையின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிறுபான்மையினர் என அனைத்து தலைவர்களையும் சந்தித்து தமிழர்கள் பிரச்சினையை பேசினேன். கடந்த காலங்களை பேசுவதைவிட எதிர்காலத்தில் இலங்கைத் தமிழர்கள் உரிமைகளை பெறவும், சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக நல்ல நிலையை அடையவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள் வது குறித்து வலியுறுத்தினேன்.

இலங்கைக்குள் சீனா நுழைவது குறித்து ராஜபக்சவிடம் பேசினீர்களா?

இந்தியாவுக்கும் இலங்கைக் கும் உள்ள உறவை வேறு யாரும் இடம்பெயர்த்துவிட முடியாது. சீனா, இந்தியாவுக்கு எதிரி நாடு கிடையாது. இலங்கைக்கு சீனா உதவுவது இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது. இது தொடர்பாக ராஜபக்சவுடன் பேசினேன். இந்திய - இலங்கை நல்லுறவில் அவர் உறுதியோடு உள்ளார்.

மக்களவை தேர்தலின்போது 272+ என்று கூறியதுபோல் தமிழகத்தில் இப்போது 122+ என்று பாஜக கோஷம் எழுப்புகிறதே, இது சாத்தியமா?

தமிழகத்தை ஆட்சி செய்தவர் கள், ஊழல் குற்றச்சாட்டுக்கும் நீதிமன்ற தண்டனைக்கும் ஆளா னவர்களாக உள்ளனர். இவர் களால் உலக அரங் கில் தமிழர்களின் தோற்றம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள் ளது. தமிழக மக்கள் தங்களுக்கு நல்ல தலைவர், நல்ல அரசு வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். எங்களுக்கு அடித்தளமே இல்லாத மகாராஷ்டிரம், ஹரியாணாவில் சாதித்துக் காட்டியுள்ளோம். தமிழகத்திலும் இது சாத்தியமாகும்.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, டிசம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார். இதில் முக்கியத்துவம் உள்ளதா?

அமித் ஷா வருகையில் 2 முக்கிய விஷயங்கள் உள்ளன. ஒன்று, 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியை பலப்படுத்துவது. இன்னொன்று உறுப்பினர் சேர்க்கையை உற்சாகப்படுத்தி, 2016 தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவது.

இலங்கையில் 5 மீனவர்களின் தூக்கு தண்டனை ரத்தான தற்கு தமிழக அரசு எடுத்த முயற்சிகள்தான் காரணம் என்று முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளாரே?

இந்தப் பிரச்சினையில் பாஜக ஒரு அரசியல் கட்சி என்பதையும் தாண்டி பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் எடுத்த முயற்சிகளும் உழைப்பும்தான் மீனவர்களை மீட்டு கொண்டுவந்தது.

ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில் பாஜக அரசு தலையிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி சந்தேகிக்கிறாரே?

திமுக தற்போது பலவீனமடைந்துவிட்டது. இதன் வெளிப்பாடாகத்தான் கருணாநிதி இப்படி சந்தேகப்பட்டுள்ளார். நரேந்திர மோடி அரசு, நேர்மையான நிர்வாகம் என்பதை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. எந்தச் சூழலிலும் நீதி நடவடிக்கைகள் மீது மோடி அரசு எவ்வித அழுத்தத்தையும் கொடுக்காது. இது தமிழக மக்களுக்கும் தெரியும்.

இவ்வாறு முரளிதர ராவ் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்