போக்குவரத்துக் கழகங்களில் அவசர அவசரமாக தற்காலிகப் பணியாளர்கள் நியமனம்

By குள.சண்முகசுந்தரம்

போக்குவரத்துத் தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முறியடிப்பதற்காக டிசம்பர் 19-ம் தேதிக்குள் சுமார் ஐயாயிரத் துக்கும் மேற்பட்டோரை தினக் கூலி அடிப்படையில் பணியமர்த் துவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

ஊதிய உயர்வு உள்ளிட்ட தங்களின் தீர்க்கப்படாத பிரச்சினை களுக்காக டிசம்பர் 19-ம் தேதியிலிருந்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. அண்ணா தொழிற்சங்கம் தவிர அனைத்து முக்கியத் தொழிற்சங்கங்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பதால் பேருந்துப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்படும்.

இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தை முறியடிக்கும் வகையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு புதிதாக தினக் கூலி அடிப்படையில் ஆட்களை நியமிக்க அவசர அவசரமாக நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. டிசம்பர் 10-ம் தேதியிலிருந்து 16-ம் தேதி வரை நேர்முகத் தேர்வுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளன. இதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு உடனுக்குடன் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு, அனை வரையும் 19-ம் தேதி பணியில் சேர உத்தரவிடப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘தி இந்து’விடம் பேசியபோது கூறியதாவது: ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்பட போக்குரவத்துக் கழகங்களில் சுமார் 15 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இவைகளை நிரப்ப வேண்டும் என்பதும்தான் எங்களது கோரிக்கை. ஆனால், இப்போது அவசர அவசரமாக புதிதாக பணியில் சேர்க்கப்படும் நபர்களை வைத்து பேருந்துகளை இயக்கிவிட்டு, போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டத்தை முறிய டிக்கப் பார்க்கின்றனர்.

இதுகுறித்து தொமுச பேரவையின் பொதுச்செயலாளர் மு.சண்முகம் இந்த நேர்முகத் தேர்வுகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் மட்டுமின்றி நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளனர். சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை வேலைக்கு எடுக்கப் போகின்றனர். ஆனால் 600 ரூபாய் வீதம் சுமார் ஒண்ணே கால் லட்சம் விண்ணப்பங்கள் விற்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் ஏழரை கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் பணியிடத்துக்கு இவ்வளவு என அட்டவணை போட்டு ஆளும் கட்சியினர் வசூல் வேட்டை நடத்துகின்றனர் என அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளன (சி.ஐ.டி.யு) பொதுச்செயலாளர் ஆறுமுக நயினாரிடம் கேட்டபோது, “ஐயாயிரம் காலிப் பணியிடங்களை அறிவித்து அதற்கு மட்டுமே ஆட்களை எடுக்கப் போவதாக சொல்கிறார்கள். அதை மட்டும் எடுத்தால் இது வழக்கமான பணி நியமனம்தான் எனக் கருதலாம். அதைவிடுத்து கூடுதல் எண்ணிக்கையில் ஆட்களை எடுத்தால் அது வேலைநிறுத்தத்தை முறியடிப்பதற்கான வேலையாகத் தான் இருக்கும்’’ என்றார்.

போக்குவரத்துக் கழகங்கள் தரப்பில் பேசியவர்களோ, “வேலைநிறுத்தப் போராட்டத்துக்கும் இந்த பணி நியமனங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது வழக்கமானதுதான். அரசு ஊழியர் நியமனங்களின்போது வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் மட்டுமின்றி வெளியிலிருந்து விண்ணப்பிக்கும் நபர்களையும் பரிசீலிக்க வேண்டும் என 2010-ல் தலையாரிகள் நியமனத் தின்போது நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. அதன்படிதான் இப்போது வெளியிலிருந்தும் விண்ணப்பங் களை கோரியுள்ளனர்’’ என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்