தமிழகத்தில் நேற்று நடந்த குரூப்-4 தேர்வில் ஏறத்தாழ 2 லட்சம் பேர் பங்கேற்கவில்லை.
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளை நிரப்புவதற்காக குரூப் - 4 தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்றபோதிலும், பட்டதாரி களும், முதுகலை பட்டதாரிகளும் அதிகளவில் குரூப் - 4 தேர்வை எழுதுகிறார்கள்.
இந்த தேர்வுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றாலே வேலை உறுதி என்பதால் தேர் வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது.
4,963 பணியிடங்கள்
இந்த ஆண்டு குரூப்-4 பணிகளில் 4,963 இடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு 11 லட்சத்து 72 ஆயிரத்து 293 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான எழுத்துத்தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. விண்ணப்பித்தவர்களில் 9 லட்சத்து 84 ஆயிரம் பேர் தேர்வில் கலந்துகொண்டனர். ஒரு லட்சத்து 87 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை.
கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வுக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வராமல் இருந்தது குறிப்பிடத் தக்கது.
பொதுவாக, அரசு பணி களுக்கான போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களில் ஒருசிலர் நண்பர்களைப் பார்த்தும், பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களின் வலியுறுத்தல் காரணமாகவும் தேர்வுக்கு விண்ணப்பித்துவிடுவார்கள். அவர்களில் பலர் தேர்வுக்கு அனு மதிக்கப்பட்டாலும் தேர்வு எழுதுவதை தவிர்த்து விடுவது வழக்கம். அதேபோல், தேர்வுக்கு இடையே வேறு வேலை கிடைத்தவர்களும், பல்வேறு காரணங்களால் தேர்வில் கலந்துகொள்ள இயலாதவர் களும் தேர்வை தவிர்த்துவிடக் கூடும். இத்தகைய காரணங் களால் வராதோர் எண் ணிக்கை அதிகமாகியிருக்கலாம் என்று தனியார் பயிற்சி மையத்தினர் தெரிவித்தனர்.
இந்த தேர்வுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றாலே வேலை உறுதி என்பதால் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago